கொரோனா குறித்து, முஸ்லிம்களிடம் நிலவும் கருத்தியல்கள்...!
By:- Dr Ziyad Aia
சீனாவில் பரவி இப்போது உலகையே ஆட்டிக் கொண்டிருக்கும் (Wuhan) Novel Corona Virus சமூக வலைத்தளங்களில் பல கருத்தியல்களை உருவாக்கி வருகிறது.
1. சீனா முஸ்லிம்களுக்கு செய்த அநியாயத்துக்கான தண்டனை.
2. ஹலாலான உணவுகளை விட்டுவிட்டு ஹராமின் பக்கம் சென்றதன் விளைவு.
3. முகத்தை மூட வேண்டாம் என தடை செய்த நாடுகளுக்கு இறைவனின் படிப்பினை.
என்று பல Fatwa க்கள் வெளியாகிக்கொண்டு இருக்கின்றன.
இன்னொரு பக்கம் 'சீனா தயாரித்து வந்த உயிரியல் ஆயுதங்களின் ( Biological Weapon) பக்க விளைவு, மருத்துவ மாபியாக்கள் நோயையும் பருப்பி அதற்கான மருந்தையும் தடுப்பூசிகளையும் இன்னும் சில நாட்களில் வெளியிடும். இது ஒரு வியாபாரம்" இப்படி பல Instance Justice வெளியாகிக் கொண்டே தான் இருக்கின்றன.
முதலில் இந்த கொரோனா வைரஸ் இன் வரலாற்றை அறிந்தால் இப்படி தீர்ப்பு எழுதுவது சரியா? என்பது விளங்கும்.
இந்த Corona Virus என்பது சர்வ சாதாரணமாக மனிதனில் காணப்படும் ஒன்றுதான். என்னடா இது புது புரளியா உள்ளது?
ஆம். பிரதானமாக நான்கு வகை வைரஸ்கள் மனித உடலில் காணப்பட்டு அடிக்கடி ஜலதோஷம் (தடிமல்), காய்ச்சல் போன்றவற்றை ஏற்படுத்தும். அவை:-
Common human coronaviruses
01. 229E (alpha coronavirus)
02. NL63 (alpha coronavirus)
03. OC43 (beta coronavirus)
04. HKU1 (beta coronavirus)
உண்மையில் இந்த Corona Virus கள் 1960 களில் மனிதனில் கண்டுபிடிக்கப்பட்டன. இவற்றின் வெளிச்சுவரில் அரச கிரீடத்தை (Crown-Like) ஒத்த வெளிநீட்சிகள் காணப்பட்டதால் Corona Virus என பெயரிடப்படுகின்றன.
மேலே சொன்ன நான்கு வகைக் மேலதிகமாக ஆபத்தான இன்னும் மூன்று வகை உள்ளன. இவை mutation களாக உருவாகி இருக்கலாம் என நம்பப்படுகிறது. அவை தான் மனித இனத்துக்கு மிக அச்சுறுத்தலாக அமைந்து விட்டன. (அதாவாது சமீபத்தில் சீனாவில் பரவிய Virus உடன் சேர்த்து 7 வகை)
05. SARS-CoV (the beta coronavirus that causes severe acute respiratory syndrome, or SARS):-
இது 2002 இல் முதன்முதலாக தென்சீனவில் பதிவாகியது.
வெளவால்களின் மூலம் ஏனைய விலங்குகளுக்கும் மனிதர்களுக்கும் பரவி பின்னர் மனிதனிலிருந்து மனிதனுக்கே பரவியது.
8098 Case கள் பதிவாகி 774 மரணங்கள் ஏற்பட்டது. (மரண வீதம் 10%)
இதற்கு எந்த மருந்தோ தடுப்பூசிகளோ கண்டுபிடிக்கப்படவில்லை. அதேநேரம் 2004 பின் எந்த புதிய Case உம் பதிவாகவில்லை
06. MERS-CoV (the beta coronavirus that causes Middle East Respiratory Syndrome, or MERS)
இது முதலாவதாக 2012இல் சவுதி அரேபியாவில் பதிவாகியது.
இது பொதுவாக ஒட்டகங்களை தொடுவதன் மூலமும் அவற்றின் இறைச்சியை சாப்பிடுவதன் மூலமோ, பாலை அருந்துவதன் மூலமோ பரவியது. மனிதனிலிருந்து மனிதனுக்கு மிக குறைந்த அளவே பரவுவதாக நம்பப்படுகிறது.
இதுவரை 2494 உறுதியான Cases உள்ளத்தோடு 2019-11-30 வரை 858 மரணங்கள் நிகழ்ந்துள்ளன. (மரண வீதம் 34%)
2016 யிலிருந்து இதன் தொற்று இயற்கையாகவே குறைந்து கொண்டு வருகிறது.
07. 2019 Novel Coronavirus (2019-nCoV):-
இது சீனாவின் Wuhan மாநிலத்தில் முதலில் பதிவாகி நாளுக்குநாள் இதன் தொற்றுகளும் மரணங்களும் அதிகரித்துக் கொண்டு வருகிறது.
இதுவும் SARS போலவே வெளவால் இல் இருந்து பாம்புகள் போன்ற வன விலங்குகளுக்கு பரவி மனிதனை வந்தடைந்து இப்போது மனிதனிலிருந்து மனிதனுக்கே பரவுகிறது.
பொதுவாக மரணித்தவர்கள் வயதான நோய் எதிர்ப்பு சக்தி குறைந்த ஆண்கள்.
எனவே இவ்வகையான Case History களை பார்க்கும்போது Wuhan Virus க்கு நாம் வழங்கும் Fatwa க்கள் சவூதி அரேபியாவில் பரவிய MERS க்கு பொருந்தாது.
ஒரு சமுதாயத்தின் மேல் இறங்கும் தொற்றுநோய் தண்டனையா? சோதனையா? என்பதை இறைவனே அறிவான்.
சீனாவில் பரவிய நோய் இப்போது உலகெங்கும் பரவி வருகிறது. இதனை ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கு எதிரான தண்டனை எனக் கொள்ளலாமா? எத்தனை அப்பாவிகள் பாதிக்கப்படுகின்றனர்?
இது மருத்துவ mafia என்று பெயரிட்டாலும் இது வரை பரவிய (SARS, MERS) எதற்கும் மருந்துகள், தடுப்பூசிகள் இல்லை.
மனிதனில் உருவாகும் நோய் எதிர்ப்பு சக்தி மூலமாகவே நாளடைவில் காணாமல் செல்கின்றன.
இது Biological Weapon ( உயிரியல் ஆயுதம்) என்ற கருத்தியலில் உண்மை இல்லாமல் இல்லை.
ஏற்கனவே சீனா Generically Modified Human எனும் மரபணு மாற்றப்பட்ட மனிதனை உருவாக்கி உலகையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கி ஒரு வருடம் கூட தாண்டவில்லை. (Link ஐ பார்க்க)
அதே நேரம் Wuhan நகரம் Virus ஆராய்ச்சிக்கு பெயர்போன இடம். அங்குதான் உயர் தொழில்நுட்ப சோதனை கூடமான Wuhan Institute of Virology உள்ளது. அதிலிருந்து எதேச்சையாகவோ , கைமீறிய நிலையிலோ இந்த virus பரவி இருக்கலாம் என்ற வாதமும் இப்போது மேலைத்தேய Media க்களில் பேசப்பட்டு வருகிறது. ஏற்கனவே SARS, MERS பரம்பலின்போதும் சீனாவின் கைவரிசை பேசப்பட்டது.
சீனா என்று வரும்போது அது தனது தகவல்களை அடக்கி வாசிப்பதும், மேலைத்தேய ஊடகங்கள் அதனை ஊதிப் பெருப்பிப்பதும் காலாகாலம் நிகழ்வதுதான்.
உலகை உலுக்கிய இந்த Corona வைரஸ் நோய்கள் நாளடைவில் மனிதனின் நோய் எதிர்ப்பு சக்தியாலேயே காணாமல் சென்றுவிட்டன.
எனவே தற்போதைய சூழ் நிலையிலும், பீதி கொள்ளாமல் பாதுகாப்பு நடவடிக்கைகளையும், ஆரோக்கியமான வாழ்க்கை முறைகளைப் பேணி உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப் பெறச் செய்வதன் மூலம் வெற்றி கொள்ளலாம்.
நோயை தருபவனும் அவனே. குணப்படுத்துபவனும் அவனே.
உண்மை தான்.நல்ல விஷயங்களை தெளிவுபடுத்தி உள்ளீர்கள்.நன்றி இந்த வேளையில் அறிவியல்ரீதியாக விளக்கம் தந்தமைக்கு.
ReplyDeletevery good this the fact,
ReplyDeleteTHIS WORLD BUSINESS MAFIYA CREATED THIS, BECAUSE CHAINA VERY VERY CHALLENGE FOR THEM, DON'T LAUGH WAIT ALL THINGS PRICE WILL GO NOW LIKE MOUNTAIN,
ReplyDeleteකොරොනා වෛරස පැතිර යාම පිළිබඳව සමාජ ජාලයේ ඇතැම් මුස්ලිම් භක්තිකයෝ පවසන අදහස් හා පෙන්වා දීමි, ඉස්ලාමීය ආගමික මූලධර්ම වලට නොගැලපෙන බව අපි සැමදෙනා පිළිගැනීමට සිදුවෙනවා .
ReplyDeleteචීන ජාතිය අමුතු ජාතියක් බව පැහැදිලි නමුත් , මේ සිදුවීම ඉස්ලාමය සමග සම්බන්ධ කිරීම , දේව කෝපය දඬුවම ලෙස පෙන්වා දීම සුදුසු නැත .
ඉස්ලාමීය ඉගැන්වීම් තුළ කෙනෙකුට , සමාජයට , ජාතියකට හෝ රටකට සිදුවෙන අයහපත් දෙයක් කෙරෙහි සතුටු වීමට ඉඩ නැත . ආගම ,රට,ජාතිය වෙනසක් වුවත් සියල්ල ආදමිගේ දරුවෝය ,මනුස්සකම සමානයි යයි ඉස්ලාමය උගන්වයි .
චීන ජාතිය කන හරාමි, ආහාරයට අල්ලාහ් මෙසේ සලකනවා නමි, ඉස්ලාමය නොදැන සිටින උන්ට වඩා , දැන දැන වැරදි කරන මුස්ලිම් අපට මොනවා සිදුවිය යුතුද ?
ඊට වඩා ඉස්ලාමය හදාරා මුස්ලිම් ලේ හරහා ඩොලර් උපයන අමෙරිකානු ඊශ්රායලය අල්ලාහ් නොදැක සිටිනවා ද?
හොඳ හෝ නරක කරගැනීමට මිනිසාට අවකාශය ලැබෙනවා . මරණයට පසුව එය සඳහා වන්දි ගෙවීමට සිදුවෙන බව නියතයි .
චීන අනතුර ලෝකයේ කලින් කලට ඇතිවෙන වසංගත වැනි එකක් වෙන්නත් පුළුවනි .
Biological weapon අත්හදා බැලීමේ දී සිදුවූ අනතුරක් වෙන්නත් පුළුවනි .
ඇතැම් විට දේව දඬුවම් විය හැකිය .
Quranaya පවසන ආකාරයට එවැනි දඬුවම් පැමිණීමට පෙරාතුව කොන්දේසි කිහිපයක් තේරුම් ගත යුතුයි . ඔවුනට ඉස්ලාමය පහදා දුන්නද ? එය ඔවුන් තේරුම් ගත්තා ද? ඔවුන්ගේ hirda shaakshiyata විරුද්ධව ඉස්ලාමය විනාස කරන්න නැගී සිටියද ? එසේනම් දේව දඬුවම් ලැබීමට ඉඩකඩ තිබෙනවා .
අනික , korona උවදුර චීන ජාතියට පමණක් අනතුරක් නොවේ. එය පාලනය නොවුනොත් ලොවම අනතුරේ .එවිට මෙය සාධාරණ දෙයක් වෙනවාද ?
Chinese cobra ඌරන් පමණක් නොව එලුවන් ඔටුවන් හරක් මගින් ද අනතුරක් තිබෙනවා .
චීනය හෙට ඔවුන්ගේ දැනුමෙන් දක්ෂතා තුළින් අභියෝගයන් ජයගත් විට අල්ලාහ් පැරදුණු අපි පිළිගැනීමට සූදානම් ද?
එමනිසා අනවශ්ය ලෙස මෙයට ආගම ගාව ගන්න අවශ්ය නැහැ .ඉස්ලාමයේ sathya තාවය quran hadees තුළින් අතීත වර්තමානය අනාගතය පිළිබඳව තිබෙන කරුණු ගැන කතා කරන්න .
මනුස්සකම උදෙසා චීන ජාතිය වගේම සමස්ත ලෝක වාසීන් සඳහාම අල්ලාහ් ගෙන් prarthana කරන්න . චීන ජාතිය ඔවුන්ගේ වැරදි නිවැරැදි කරගැනීමට මෙය පාඩමක් කරගැනී කියා විශ්වාස කරමු .