Header Ads



கல்முனை மாநகரசபை அமர்வில், ஏ.ஆர்.எம்.ஜிப்ரிக்கு இரங்கல்

( எம்.என்.எம். அப்ராஸ் )

கல்முனை மாநகர சபை மாதாந்த அமர்வு  கல்முனை மாநகர சபை மண்டபத்தில் மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டதரணி எ.எம். றகிப் தலைமையில்  இன்று (23)  பிற்பகல்
 நடைபெற்றது. 

இம் மாநகர சபை அமர்வில் கடந்த திங்கட்கிழமை  மரணமடைந்த சிரேஷ்ட ஊடகவியலாளரும் புகழ்பெற்ற அறிவிப்பாளருமான ஏ.ஆர்.எம்.ஜிப்ரி அவர்களுக்கான இரங்கல் பிரேரணையை முன்மொழிந்து கல்முனை மாநகர சபை உறுப்பினர் சப்ராஸ் மன்சூர் உரை நிகழ்த்தினார். 

தனது உரையில், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வந்த நிலையில் தனது 60ஆவது வயதில் காலமான ஏ.ஆர்.எம்.ஜிப்ரி
 அவர்களின் இழப்பானது கல்முனை பிராந்தியத்துக்கு மட்டுமல்ல முழு இலங்கைக்கும் ஓர் பேரிழப்பாகும் .

கல்முனை உவெஸ்லி உயர்தரப் பாடசாலையில் கல்வி பயின்று, குண்டசாலை விவசாயக் கல்லூரியில் டிப்ளோமா பெற்ற புகழ்பெற்ற விஞ்ஞானப் பாட ஆசிரியரான இவர் களுத்துளை ஜீலான் மத்திய கல்லூரி, தொடவத்தை அல் பஹ்ரியா பாடசாலை ஆகியவற்றில் அதிபராகவும் பணியாற்றினார்.  இவர் நாடுதழுவிய ரீதியில் தெரிவு செய்யப்பட்ட பத்து அதிபர்களில்  ஒருவராவராக தெரிவாகி எம்மண்ணுக்கு பெருமை சேர்த்தார்.
சமூக சேவைகளில் தன்னை அர்ப்பணித்த இவரின் சேவை பாராட்டக்கு ரியது. 

சிறுபான்மை மக்களின் பலம் கல்வியாகும் என கூறி பல இளம் ஊடகவியலாளர்களையும், கல்வியலாளரகளையும் உருவாக்கிய பெருமை இவரை சாரும்.

இவரின் குடும்பத்திற்கு பொறுமை வழங்கவும் இவரை இறைவன் பொருந்தி கொண்டு சுவனத்தை வழங்கவும் இறைவனை பிராத்திக்கிறேன் என்றார்.

இவ் இரங்கல் உரையில் கல்முனை மாநகர முதல்வர் ஏ.எம்.ரக்கீப் 
கருத்து தெரிவிக்கையில் 
மாணவர்களில் அறிவு களஞ்சியம் நிகழ்வில் புகழ் புத்தவர் இவரில் இழப்பு சமூகத்திற்க்கு பாரிய இழப்பாகும் இவரின் இழப்பால் அவரை பிரிந்து வாடும் குடும்பத்தினருக்கு இறைவன் பொறுமையை வழங்குவதுடன், அவருக்கு இறைவன் மேலான சுவனத்தை வழங்க பிராத்திக்கிறேன் என்றார். 

சபை அமர்வில் கலந்து கொண்ட ஏனைய உறுப்பினர்களும் தமது உரைகளில் அனுதாபத்தை வெளியிட்டனர்.

No comments

Powered by Blogger.