"அரபுக் கல்லூரிகள் ஒளிமயமான எதிர்காலத்தை நோக்கி ..."
"அரபுக் கல்லூரிகள் ஒளிமயமான எதிர்காலத்தை நோக்கி ..." எனும் கருப்பொருளில் நத்வத்துர் ரஹ்மானிய்யீன் ஏற்பாடு செய்திருந்த ரஹ்மானிகளுக்கிடையிலான திறந்த கலந்துரையாடல் 2020.01.22 புதன்கிழமை ஸம்ஸம் நிறுவனத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. அல்ஹம்து லில்லாஹ்.
காலை 09:30 முதல் மாலை 09:30 வரை நடைபெற்ற இக்கலந்துரையாடலில் நாட்டின் பல பாகங்களிலுமுள்ள அரபுக் கல்லூரிகளில் அதிபர்களாக, உதவி அதிபர்களாக மற்றும் ஆசிரியர்களாக கடமையாற்றும் ரஹ்மானிகள் கலந்துகொண்டனர்.
நிருவாகம், நிதி, கல்வி மற்றும் ஒழுக்கம் என நான்கு பிரதான கூறுகளாக பிரித்து அரபுக் கல்லூரிகளில் காணப்படும் பிரச்சினைகளைக் கண்டறிந்து, அப்பிரச்சினைகளுக்கான தீர்வுகளைக் காண்பது இந்தக் கலந்துரையாடலின் முக்கிய நோக்கமாகும். பல தொடர்களாக நடத்த திட்டமிடப்பட்டுள்ள இக்கலந்துரையாடலின் முதல் தொடரில் அரபுக் கல்லூரிகள் நிர்வாக ரீதியாக எதிர்கொள்ளும் பிரச்சினைகள் பகுப்பாய்வு செய்யப்பட்டு அவற்றைத் தீர்த்துவைக்கும் வழிகளும் முடிவுசெய்யப்பட்டன.
நத்வத்துர் ரஹ்மானிய்யீனின் தலைவர் முப்தி எம்.எச்.எம். யூஸுப் (ரஹ்மானி) அவர்களின் தலைமையில், அதன் செயலாளர் அஷ்-ஷைக் எச். அப்துல் நாஸர் (ரஹ்மானி) அவர்களின் வழிகாட்டலில் இந்தக் கலந்துரையாடல் நடைபெற்றது. நத்வாவின் உதவிச் செயலாளர் அஷ்-ஷைக் எம்.எம்.எம். அஜ்மல் (ரஹ்மானி) அவர்களின் நெறியாள்கையில் நிகழ்ச்சிகள் நடந்தேறின.
ஹாபில் ஏ.எம். ஜாமில் (ரஹ்மானி) அவர்களின் அழகிய அல்-குர்ஆன் பாராயணத்துடன் ஆரம்பமான கலந்துரையாடல் நிகழ்வில் அரபுக் கல்லூரிகள் பற்றிய SWOT பகுப்பாய்வை ஸம்ஸம் நிறுவனத்தின் திட்ட முகாமையாளர் சகோதரர் இர்பான் ஜுனைதீன் நெறிப்படுத்தினார். அரபுக் கல்லூரிகளின் நிர்வாகத்தை திட்டமிடல் தொடர்பில் நீண்ட நேரமெடுத்து ஆழமாக, அகலமாக, விபரமாக விளக்கி குறிப்புகள் அடங்கிய கைப்பிரதிகளையும் வழங்கியுதவினார் அஷ்-ஷைக் அப்துல் நாஸர் அவர்கள். கலந்துரையாடலின் ஆரம்பத்திலும், இறுதியிலும் முப்தி யூஸுப் அவர்களின் புத்தூக்க உரைகள் இடம்பெற்றன. நிகழ்ச்சிகளின் நிறைவில் நத்வாவின் பொருளாளர் அஷ்-ஷைக் எம்.ஜே.எம். ருஸ்னி (ரஹ்மானி) நன்றியுரை வழங்கினார்.
"அரபுக் கல்லூரிகள் ஒளிமயமான எதிர்காலத்தை நோக்கி ..." திட்டத்துக்கு ஸம்ஸம் நிறுவனம் முழுமையாக அணுசரனை வழங்கியுதவுகிறது.
நத்வத்துர் ரஹ்மானிய்யீன்,
ஊடகப் பிரிவு , 2020.01.23
Post a Comment