ரணிலின் உத்தரவை மீறி, சஜித் இன்று பிரதேச அரசியல்வாதிகளை சந்திக்கிறார்
ஐக்கிய தேசியக் கட்சியின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோருக்கு இடையிலான முக்கிய கலந்துரையாடல் இன்றைய தினம் -26- இடம்பெறவுள்ளது.
குறித்த கூட்டம் கொழும்பில் உள்ள கண்காட்சி மற்றும் மாநாட்டு நிலையத்தில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எதிர்வரும் பொதுத்தேர்தலில் சஜித் பிரேமதாசவை பிரதமராக்கும் வேலைத்திட்டத்தின் ஒரு கட்டமாக இந்த சந்திப்பு நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஐக்கிய தேசிய முன்னணியின் மாகாணசபை உறுப்பினர்கள், வேட்பாளர்கள், தொகுதி அமைப்பாளர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோரை சஜித் பிரேமதாச இதன்போது சந்திக்கவுள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலில் வழங்கிய ஆதரவுக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும், தற்போதைய அரசியல் நிலைப்பாடு தொடர்பிலும் குறித்தும் இக்கூட்டத்தில் ஆராயப்படவுள்ளது.
அத்துடன், எதிர்வரும் பொதுத்தேர்தலில் களமிறங்குவது தொடர்பாகவும் அவர் தனது கருத்துக்களை தெரிவிக்க உள்ளதுடன், ஏனையோரின் கருத்துக்கள் குறித்தும் ஆலோசிக்கப்படவுள்ளது.
இந்தக் கூட்டத்தை நடாத்த வேண்டாமென கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க சஜித் தரப்பினருக்கு கண்டிப்பான உத்தரவை பிறப்பித்திருந்தார். எனினும் இந்த உத்தரவை மீறி இந்த சந்திப்பு நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment