வெலிகடை சிறைக்குள் மதூஷ் - ஊருஜூவா குழுவினரிடையே மோதல்
கொழும்பு வெலிகடை சிறைச்சாலைக்குள் போதைப்பொருள் வர்தகரான மாகதுரே மதூஷ், ஊருஜூவா என்பவரின் குழுக்களிடையே மோதலொன்று ஏற்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.
இதன்போது மதூஷ் குழுவைச் சேர்ந்த ஒருவர் மற்றைய குழுவைச் சேர்ந்த கைதி ஒருவர் மீது ஊசியேற்றும் சிலிஞ்சர் மூலம் தாக்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
போதைப்பொருள் வர்த்தகமே மேற்படி மோதலுக்கு காரணம் எனவும் தற்போது இருவரும் வேறுபட்ட சிறைச்சாலைகளுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் அறிய முடிகிறது.
Post a Comment