Header Ads



ரஞ்சன் எவ்வித இறுவட்டுக்களையும், பாராளுமன்றில் ஒப்படைக்கவில்லை - சபாநாயகர்

பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க எவ்வித குரல்பதிவுகள் அடங்கிய இறுவட்டுக்களையும் பாராளுமன்றத்திற்கு ஒப்படைக்கவில்லை என சபாநாயகர் கரு ஜயசூரிய உறுதிப்படுத்தியுள்ளார். 

இன்று (24) பாராளுமன்ற கூடிய போது சபாநாயகர் இதனை தெரிவித்தார். 

சர்ச்சைக்குரிய குரல்பதிவுகள் அடங்கிய இறுவட்டுக்களை பாராளுமன்றில் ஒப்படைப்பதாக கடந்த செவ்வாக்கிழமையன்று பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்திருந்தார். 

இந்நிலையில், ரஞ்சன் ராமநாயக்க கடந்த புதன் கிழமையன்று தொலைப்பேசி உரையாடல் குரல்பதிவுகள் அடங்கிய இறுவட்டுக்கள் சிலவற்றை பாராளுமன்றில் ஒப்படைத்ததாக நேற்றைய பாராளுமன்ற அமர்வின் போது பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.