Header Ads



தேர்தலில் மொட்டு சின்னத்தில் போட்டி, பெரும்பான்மை பெற அடிப்படைவாதிகளுடன் கைக்கோர்க்க மாட்டோம்

(இராஜதுரை ஹஷான்)

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன எத்தரப்பினருடன்  கூட்டணியமைத்தாலும் பொதுத்தேர்தலில் மொட்டுச் சின்னத்திலேயே வெற்றிப் பெறும். பெரும்பான்மை மக்களின் ஆதரவினை இச்சின்னமே பெற்றுள்ளது என போக்குவரத்து சேவைகள் முகாமைத்துவ இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார். 

அத்துடன் இடம்பெறவுள்ள பொதுத்தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையினை பெற்றுக்கொள்வதற்காக அடிப்படைவாதிகளுடன் ஒருபோதும்  கைக்கோர்த்து செயற்படமாட்டோம்.  

நாட்டு மக்களே எமக்கு பெரும்பான்மை பலத்தை வழங்கி பலமான அரசாங்கத்தை தோற்றுவிக்க ஒத்துழைப்பு வழங்குவார்கள்.

பொதுஜன பெரமுனவில் பல பங்காளி கட்சிகள் உள்ளார்கள். அனைத்து கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புக்களை ஒன்றிணைத்து கூட்டணியமைத்து பொதுத்தேர்தலில் போட்டியிடுவோம். 

கூட்டணியமைப்பதால் பொதுஜன பெரமுனவில் மொட்டுச்சின்னத்தில் மாற்றம் ஏற்படாது. பெரும்பாலான உறுப்பினர்கள் மொட்டு சின்னத்திலேயே போட்டியிட  தீர்மானித்துள்ளானர் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

No comments

Powered by Blogger.