இலங்கை பெண்ணுக்கு, கொரோனா வைரஸா..? இத்தாலியில் பரிசோதனை
இலங்கையைச் சேர்ந்த பெண் ஒருவர் அதிக காய்ச்சல் மற்றும் கடுமையான சுவாசக் கோளாறினால் இத்தாலியில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதை அடுத்து கொரோனா வைரஸ் தொற்று நோய் குறித்த மருத்துவப் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளார்.
63 வயதான இலங்கை பெண் இத்தாலியில் நேபிள்ஸ் நகரத்திலுள்ள கோட்டுக்னோ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இத்தாலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சீன கொரோனா வைரஸ் தொற்று குறித்து பெண் சோதனை செய்யப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர் செவ்வாயன்று இலங்கையில் இருந்து இத்தாலிக்கு சென்றிருந்த நிலையிலேயே அவருக்கு நோயின் அறிகுறிகள் காட்டத் தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment