தேசியக் கொடியை ஏற்றுமாறும், மரக்கன்றுகளை நாட்டுமாறும் அழைப்பு
72 ஆவது சுதந்திர தினமான பெப்ரவரி மாதம் 4 ஆம் திகதி அன்று அனைத்து வீடுகளிலும் மற்றும் வர்த்தக நிலையங்களிலும் தேசியக் கொடியை ஏற்றுமாறு உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
வீடுகளில் மரக்கன்றுகளை நாட்டுமாறும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
சுதந்திர தினத்தை முன்னிட்டு ஒழுங்கு செய்யப்பட்டுள்ள முன்னோட்ட நிகழ்ச்சிகள் எதிர்வரும் 26 ஆம், 31 ஆம் திகதிகளிலும், பெப்ரவரி மாதம் முதலாம், 2 ஆம், 3ஆம் திகதிகளிலும் இடம்பெறவுள்ளன.
இதற்கமைவாக, விசேட வாகன ஒழுங்குகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தேசியக் கொடியை ஏற்றுவது மக்களது தேசிய உணர்வை மேலோங்கச் செய்யும்.
ReplyDeleteமரத்தை நடுவது, நாட்டுக்கு மழை வளம் பெருகவும் பூமி வெப்பமாவதைக் குறைக்கவும் வழிகோலும்.
அதேநேரம், பொருளாதார நோக்கங்களுக்காகப் பயிரிடுவோருக்கும் தம் வீட்டுச் சூழலையும் நகரையும் அழகுபடுத்த விரும்புவோருக்கு வரப்பிரசாதமாகவும் இருக்கும்.
ஆனால், இவற்றுக்குத் தடையாக இருக்கும் கட்டாக்காலி ஆடு மாடுகள் போன்ற கால்நடைகளைக் கட்டுப்படுத்த வேண்டியது அரசாங்கத்தின் கடமையாகும்.
அல்லாதுவிடின் பாதுகாப்பான போக்குவருத்துக்கும் சுகாதாரத்துக்கும் கூட இவை பேரிடராகும்.
இன்னும் மிருக வதைகளுக்கும் அவைகளின் உரிமையாளருக்கும் பாதிக்கப்படுவோருக்கும் இடையிலான பகைமைக்கும் அது வழிகோலும்.
எனவே, அண்மைய தேர்தலின்போது வாக்குகளுக்காக வீடு வீடாக வரவிருக்கும் அவ்வவ்வூர் அரசியல் வாதிகள் மற்றும் நகர சபை நிர்வாகிகளிடம் இப்போதே இக்கால்நடைகளைக் கட்டுப்படுத்துவதை உறுதிப்படுத்திக் கொள்ளுமாறு வேண்டுகின்றேன்.