கொரோனா பற்றி இலங்கையர்கள், அதிக கவனம் செலுத்த வேண்டும் - சுகாதார அமைச்சு எச்சரிக்கை
சீனாவில் பரவும் புதிய கொரோனா வைரஸ் தொடர்பில் இலங்கை மக்கள் அதிக அவதானம் செலுத்த வேண்டும் என இலங்கை சுகாதார அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.
தெற்காசிய நாடுகள் பலவற்றிற்கு இந்த வைரஸ் மிக வேகமாக பரவுகின்றமையே இதற்கு காரணமாகும்.
காய்ச்சல், இருமல், தடுமல், மூச்சு விடுவதில் சிரமம், மூக்கில் நீர் வடிதல், தலைவலி, தொண்டை வலி மற்றும் உடல் வலி போன்ற நோய் அறிகுறிகள் காணப்பட்டால் உடனடியாக வைத்தியரிடம் சென்று பரிசோதனை மேற்கொள்ளுமாறு சுகாதார பிரிவு பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.
வேகமாக பரவும் ஆபத்தான கொரோனா வைரஸ் தொற்றினால் நிமோனியா மற்றும் சிறுநீர் கோளாறு உட்பட பல்வேறு ஆபத்துக்கள் ஏற்பட கூடும். கொரோனா வைரஸ் ஆபத்தை தடுப்பதற்கு மேற்கொள்ள கூடிய நடவடிக்கை தொடர்பில் சுகாதார அதிகாரிகளினால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
கை கழுவுதல், கிருமி நாசினி பயன்பாடு, இருமல் மற்றும் தும்மலின் போது கைக்குட்டை அல்லது திசு பயன்படுத்துமாறும், பயன்படுத்திய கைக்குட்டையை அவதானமாக குப்பைத்தொட்டியில் போடுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், இருமல் மற்றும் தும்மலின் போது கைக்குட்டை அல்லது திசு இல்லை என்றால் முழங்கையின் உள் பக்கத்தைப் பயன்படுத்த வேண்டும் என மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.
தும்மும்போது கைகளைப் பயன்படுத்த வேண்டாம் என்றும் கோரப்பட்டுள்ளது. புதிய கொரோனா வைரஸ் ஏற்படும் அபாயத்தைத் தவிர்க்க காய்ச்சல் மற்றும் சளி உள்ளவர்களுடன் நெருங்கிய தொடர்பைத் தவிர்க்க மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
உணவுக்காக தயாரிக்கப்பட்ட இறைச்சி மற்றும் முட்டைகளை நன்கு சமைக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது.
"(தானாகச்) செத்தது,
ReplyDeleteஇரத்தம், பன்றியின் இறைச்சி,
அல்லாஹ் அல்லாததின் பெயர் அதன் மீது
கூறப்பட்ட (அறுக்கப்பட்ட)தும்,
கழுத்து நெறித்துச் செத்ததும்,
அடிபட்டுச் செத்ததும், கீழே விழுந்து செத்ததும்,
கொம்பால் முட்டப் பட்டுச் செத்ததும்,
(கரடி, புலி போன்ற) விலங்குகள் கடித்(துச் செத்)தவையும்
உங்கள் மீது ஹராமாக்கப் பட்டிருக்கின்றன;
(அனுமதிக்கப்பட்டவற்றில்) எதை நீங்கள் (உயிரோடு பார்த்து, முறைப்படி) அறுத்தீர்களோ அதைத் தவிர;
(அதை உண்ணலாம். அன்றியும் பிற வணக்கம் செய்வதற்காகச்) சின்னங்கள் வைக்கப் பெற்ற இடங்களில் அறுக்கப்பட்டவையும்;
அம்புகள் மூலம் நீங்கள் குறி கேட்பதும் (உங்களுக்கு விலக்கப்பட்டுள்ளன) -
இவையாவும் (பெரும்) பாவங்களாகும்;
இன்றைய தினம் காஃபிர்கள் உங்களுடைய மார்க்கத்தை (அழித்து விடலாம் என்பதை)ப் பற்றிய நம்பிக்கையை இழந்து விட்டார்கள்;
எனவே நீங்கள் அவர்களுக்கு அஞ்சாதீர்கள்; எனக்கே அஞ்சி நடப்பீர்களாக;
இன்றைய தினம் உங்களுக்காக உங்கள் மார்க்கத்தை பரிபூர்ணமாக்கி விட்டேன்;
மேலும் நான் உங்கள் மீது என் அருட்கொடையைப் பூர்த்தியாக்கி விட்டேன்;
இன்னும் உங்களுக்காக நான் இஸ்லாம் மார்க்கத்தையே (இசைவானதாகத்) தேர்ந்தெடுத்துள்ளேன்;
ஆனால் உங்களில் எவரேனும் பாவம் செய்யும் நாட்டமின்றி, பசிக் கொடுமையினால் நிர்ப்பந்திக்கப்பட்டு (மேலே கூறப்பட்ட விலக்கப்பட்டவற்றைப் புசித்து) விட்டால் (அது குற்றமாகாது).
ஏனெனில் நிச்சயமாக அல்லாஹ் மிகவும் மன்னிப்பவனாகவும், கருணை மிக்கோனாகவும் இருக்கின்றான்".
(அல்குர்ஆன் : 5:3)
www.tamililquran.com