கல்முனை இளம் பட்டதாரிகள் அமைப்பினால், வெற்று சுவர்களை அழகுபடுத்தும் வேலைத்திட்டம்
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் எண்ணக்கருவுக்கு அமைய, வெற்று சுவர்களையும் அழகுபடுத்தும் வேலைத்திட்டம் நாடளாவிய ரீதியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது இதற்கமைய கல்முனை இளம் பட்டதாரிகள் அமைப்பினால்(Kalmunai Undergraduate Association - KUA) கல்முனை பொலிஸ் நிலையத்தின் சுவர்களில் சுவோரோவியம் வரையப்பட்டு வருகின்றது இத்திட்டத்தின் முதற்கட்டமாக வரையப்பட்ட முப்பரிமாண சுவோரோவியத்தை திறந்து வைக்கும் நிகழ்வு இன்று(24) மாலை பொலிஸ் நிலைய முன்றலில் இடம்பெற்றது.
கல்முனை பொலில் நிலைய பொறுப்பாதிகாரி கே.எச்.சுஜித் பிரியந்த அவர்களினால் சுவரோவியம்திறந்து வைக்கப்பட்டதுடன் இதன் போது சவளக்கடை பொலிஸ் நிலைய பொறுப்பாதிகாரி ரம்சி பக்கீர் பொலிஸ் பரிசோதகர்களான என்.பி.விஜயரட்ன ,ஏ.எல் ஏ.வாஹிட், மற்றும் இளம் பட்டதாரிகள் அமைப்பனர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இவ் சுவரோவியத்தில் இன நல்லிணக்கத்தை வலியுறுத்தும் முகமாக மதஸ்தலங்களான விகாரை,கோவில்,பள்ளிவாசல், தேவாலயம் என்பன இதில் வரையப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
(எம்.என்.எம்.அப்ராஸ், எஸ்.அஷ்ரப்கான்)
Post a Comment