முடிந்தால் வெளியேவந்து கருத்து வெளியிடுங்கள் - ரஞ்சனுக்கும், ஹிருனிக்காவிற்கும் ரேனோர் சில்வா சவால்
- ஹிரு -
போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபடுவதாக ஹிரு ஊடக வலையமைப்பின் தலைவர் ரேனோர் சில்வாவிற்கும் ஹிரு ஊடக வலையமைப்பிற்கும் எதிராக அண்மையில் உண்மைக்கு புறம்பான போலியாக சோடிக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களை நாடாளுமன்ற வரப்பிரசாதங்களை பயன்படுத்தி நாடாளுமன்ற உறுப்பினர்களான ரஞ்சன்ராமநாயக்க மற்றும் ஹிருனிக்கா பிரேமசந்திர ஆகியோர் சுமத்தியுள்ளனர்.
மக்களுக்கு சேவையாற்றுவதாக கூறி பொதுமக்களின் வாக்குகள் மூலம் தெரிவாகி மக்களின் பிரச்சினைகளை புறந்தள்ளி நாடாளுமன்றில் அநாகரீகமாக வெளியிட்ட அந்த கருத்துக்களை வன்மையாக கண்டிப்பதாக ஹிரு ஊடக வலையமைப்பின் தலைவர் ரேனோர் சில்வா தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற வரப்பிரசாதங்களை பயன்படுத்தி காகித அட்டை வீரர்களை போன்று கருத்து வெளியிடுவதைதவிர்த்து முடிந்தால் நாடாளுமன்றத்திற்கு வெளியே அந்த கருத்துக்களை அதேபோன்று வெளியிடுமாறு ரேனோர் சில்வா அவர்களிடம் சவால் விடுத்துள்ளார்.
அவ்வாறு கருத்து வெளியிடப்பட்டால் அந்த தருணத்திலேயே நீதிமன்றத்தின் முன் கடும் சட்ட நடவடிக்கைஎடுக்க தயாராக இருப்பதாக ஹிரு ஊடக வலையமைப்பின் தலைவர் ரேனோர் சில்வா தெரிவித்துள்ளார்.
எந்தவித தேடல்களும் இன்றி அந்த போலி கருத்துக்களை வெளியிட்ட ஊடக தொலைக்காட்சிகளுக்கு எதிராக தமது கீர்த்தி நாமத்திற்கு ஏற்படுத்திய அபகீர்த்திக்காக ஒரு பில்லியன் நட்டஈடு கோரி சட்டக்கடிதம்அனுப்பப்பட்டுள்ளதாக ரேனோர் சில்வா தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் வெளியிடப்படும் கருத்துக்களுக்கு எதிராக நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ள முடியாதுஎன்ற காரணத்தினால் இந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்ற வரப்பிரசாதகங்களை பயன்படுத்திபோலியான கருத்துக்களை நாடாளுமன்றத்திற்கு உள்ளே வெளியிடுகின்றனர்.
முடிந்தால் நாடாளுமன்றத்திற்கு வெளியே இந்த கருத்துக்களை அதேபோல் வெளியிடுமாறும் அவ்வாறு கருத்துவெளியிடப்படும் தருணத்திலே தமது கீர்த்தி நாமத்திற்கு ஏற்படுத்திய அபகீர்த்திக்காக கடும் சட்டநடவடிக்கைசெயற்பாடுகளுக்கு முகங்கொடுத்து பில்லியன் கணக்கான நட்டஈட்டை செலுத்த தயாராகுமாறும் ரேனோர் சில்வா குறித்த நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் சவால் விடுத்துள்ளார்.
அவர் வௌியில் வந்து கருத்துத் தெரிவித்தும், இவர் ஒரு பில்லியன் நஷ்டகோருவதும் நாடகத்தின் ஒரு அம்சமே அன்றி அவை பொது மக்களின் பிரச்சினை அல்ல. இந்த அரசாங்கத்துக்கு மக்கள் நம்பி வாக்களித்தது, அவர் பேசி இவர் வழக்குப்பதிவு செய்து தேவையற்ற செய்திகளை வாசித்து நேரகாலங்களை நாசம் செய்வதற்கு அல்ல. இன்று தக்காளி ஒரு கிலோவின் விலை 420 ரூபா. அந்த நிலைமை உருவாக்கி மக்களுக்கு மேலும் மேலும் கஷ்டத்தில் போட்டவர்கள் யார்? ஏன் இந்த வாக்குறுதியை மீறு பொதுமக்களை மடையன் எனக்கருதி இந்த அரசாங்கம் செயற்படுகின்றது என்பது தான் இப்போது பொதுமக்களின் கவலையும் விரக்தியும். அதற்கு அரசாங்கம் உடனடி தீர்வு காண வேண்டும்.
ReplyDeleteWhile all the evidence are with the Government, how can he make allegations outside the house of representatives? If he does, then he is stupid.
ReplyDelete