மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் பதவிக்கு ஏ.எச்.எம்.நவாஸ்
மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவராகக் கடமையாற்றிய ஜனாதிபதி சட்டத்தரணி யசந்த கோதாகொடவை உயர் நீதிமன்ற நீதியரசராக நியமிப்பதற்கு அரசியலமைப்புப் பேரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
அத்துடன் சட்டத்தரணி யசந்த கோதாகொட உயர் நீதிமன்ற நீதியரசர் பதவிக்கு நியமிக்கப்பட்ட பின்னர் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் பதவிக்கு ஏற்படும் வெற்றிடத்துக்கு ஏ.எச்.எம்.திலீப் நவாஸை நியமிப்பதற்கும் அரசியலமைப்பு பேரவை அனுமதி வழங்கியுள்ளது.
அரசியலமைப்புக்கு அமைய ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ அவர்கள் மேற்குறிப்பிட்ட பெயர்களை அரசியலமைப்புப் பேரவைக்குப் பரிந்துரைத்திருந்தார்.
இந்நிலையில் இது குறித்து பரிசீலனை செய்யும் வகையில் இன்று பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் சபாநாயகர் கரு ஜெயசூரிய தலைமையில் அரசியல் அமைப்பு பேரவை கூடியது.
இந்நிலையில் ஜனாதிபதி பரிந்துரைத்த படி மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவராகக் கடமையாற்றிய ஜனாதிபதி சட்டத்தரணி யசந்த கோதாகொடவை உயர் நீதிமன்ற நீதியரசராக நியமிப்பதற்கு அரசியலமைப்புப் பேரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
Post a Comment