கூட்டணியமைக்கும் முடிவில், எந்த மாற்றமும் இல்லை - சஜித் தரப்பு திட்டவட்டமாக அறிவிப்பு
- Anzir -
எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில், தனியாக கூட்டணியமைக்கும் திட்டத்தில், எத்தகைய மாற்றமும் இல்லை என சஜித் தரப்பினர் திட்டவட்டமாக அறிவித்துள்ளனர்.
கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர், இந்தத் தகவலை Jaffna Muslim இணையத்திடம் உறுதிப்படுத்தினார்.
சகல கட்சிகளையும் அரவணைத்து, மாபெரும் கூட்டணியமைக்கும் செயற்பாடுகள் தொடர்ந்து தீவிரம் பெற்றுள்ளது.
இந்தக் கூட்டணிக்குள், ஐக்கிய தேசியக் கட்சியையும் உள்ளீர்க்கும் திட்டம் உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
அத்துடன் கட்சியின் பிரதித் தலைவர் பதவியை பெற்று, அடங்கி போய்விடும் திட்டம் சஜித்திடம் இல்லை எனவும், சோதிட யோசனைபடி மாத்திரம் செயற்படும் நோக்கம் சஜித்திடம் கிடையாதெனவும், மக்களின் விருப்பப்படியே அவர் கட்சித் தலைமைத்துவத்தை ஏற்க முன்வந்ததாகவும் மேலும் குறிப்பிட்டார்.
Post a Comment