வறுமை ஒழிப்புக்காக ஜனாதிபதி, உருவாக்கியுள்ள புதிய செயலணி
வறுமையை ஒழிக்க மற்றும் வாழ்கை தரத்தை உயர்த்துவதற்காக ஓய்வு பெற்ற பிரதி திறைசேரி செயலாளர் எஸ்.பி திவாரத்ன தலைமையிலான 12 பேர் அடங்கிய செயலணி ஒன்று உருவாக்கப்பட்டுள்து.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் இந்த செயலணி உருவாக்கப்பட்டுள்ளது.
ஓய்வு பெற்ற அமைச்சுக்களின் செயலாளர்கள், பல்கலைகழக விரிவுரையாளர்கள், விஷேட மருத்துவர்கள் உள்ளிட்ட துறைகளை பிரதிநிதித்துவம் செய்யும் வகையில் இந்த செயலணிக்கான உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர.
இந்த செயலணி மூலம் குறைந்த வருமானத்தை பெறும் மக்களின் பிரச்சினைகள் ஆராயப்படவுள்ளன.
சுகாதாரம், போசாக்கான உணவுகளை உட்கொள்ள செய்தல் மற்றும் சுற்றாடலை பாதுகாத்தல் போன்ற செயற்பாடுகள் இந்த செயலணியின் முக்கிய செயற்பாடுகளாகும்.
அத்துடன் கிராம மக்களின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புதலும் இந்த புதிய ஜனாதிபதி செயலணியின் பிரதான நோக்கமாகும் என ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
Post a Comment