சிறைச்சாலை பஸ் மீது, மோதிய லொறி - 12 பேர் காயம்
இன்று (23) காலை 11.30 மணியளவில் அம்பன்பொல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கலுவிலபதான பிரதேசத்தில் சிறைச்சாலை பஸ் ஒன்று விபத்துக்கு உள்ளாகியுள்ளது.
கல்கமுவ நீதிமன்றில் இருந்து மஹவ சிறைச்சாலைக்கு சந்தேகநபர்களை ஏற்றிச் சென்ற பஸ், கிளை வீதி ஒன்றில் இருந்து பிரதான வீதிக்கு பின்னால் பயணித்த லொறியில் மோதி கவிழ்ந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் சிறைச்சாலை பஸ்ஸின் சாரதி உள்ளிட்ட மூன்று அதிகாரிகளும் மற்றும் 9 சந்தேகநபர்களும் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக கல்கமுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து தொடர்பில் லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் நாளைய தினம் (24) மஹவ நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளார்.
விபத்து சம்பவம் தொடர்பில் அம்பன்பொல பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
Post a Comment