Header Ads



இலங்கையில் முகமூடிகளுக்கு பற்றாக்குறை - 8 வைத்தியசாலைகளில் தனிமைப்படுத்தப்பட்ட அறைகள் தயார்

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் என சந்தேககிக்கப்படும் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க நாடு முழுவதிலும் உள்ள எட்டு வைத்தியாலைகளில் தனிமைப்படுத்தப்பட்ட அறைகளை வைத்திருக்குமாறு சுகாதார அமைச்சு ஆலோசனை வழங்கியுள்ளது.

அதன்படி கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் என சந்தேககிக்கப்படும் நபர்களுக்கு சிகிச்சையளிக்க, கம்பஹா மாவட்ட பொது வைத்தியசாலை, நீர்கொழும்பு ஆதார வைத்தியசாலை, கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலை (களுபோவில), கொழும்பு வடக்கு போதனா வைத்தியாலை (றாகமை), கண்டி தேசிய வைத்தியசாலை, பதுளை பொது வைத்தியசாலை ஆகியன அடங்கும்.

இது தவிர மேலும் மூன்று வைத்திசாலைகளின் பெயர்கள் விரைவில் அறிவிக்கப்படவுமுள்ளது.

அத்துடன் தற்போது கொழும்பு ஐ.டி.எச். வைத்தியசாலை இதற்காக சிகிச்சைகளை மேற்கொள்ள முழுமையான தனிப்படுத்தப்பட்ட அறைகளை கொண்டுள்ளது.

இந் நிலையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் என்பவர்களை கையாளும்போது, குடிவரவு திணைக்கள அதிகாரிகளும், வைத்தியர்களும் பாதுகாப்பான மருத்துவ முகமூடிகளை பயன்படுத்துமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

அரச மருந்தகங்கள் கூட்டு ஸ்தானபத்திலும், தனியார் மருந்தகங்களிலும் மருத்துவ முகமூடிகளுக்கு பற்றாக்குறை இருப்பதானால், அதனை நிர்வத்தி செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.