அஜித் பிரசன்னவுக்கு 7 ஆம் திகதிவரை விளக்கமறியல்
ஓய்வு பெற்ற இராணுவ மேஜர் அஜித் பிரசன்ன பெப்ரவரி மாதம் 07 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஓய்வு பெற்ற இராணுவ மேஜர் அஜித் பிரசன்னவை இன்றைய தினம் (24) கொழும்பு மேல் நீதிமன்றில் ஆஜராகுமாறு நேற்றைய தினம் (23) அழைப்பாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.
முன்னாள் நீதவான் திலிண கமகேவிற்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றில் விசாரணைக்கு உட்படுத்தப்படும் வழக்கு ஒன்று தொடர்பில் கடந்த தினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்ததன் ஊடாக நீதிமன்றத்திற்கு அவமதிப்பு ஏற்பட்டுள்ளதா என்பது தொடர்பில் ஆராய்வதற்காக அவருக்கு இவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
அதன்படி, நீதிமன்றில் இன்று முன்னிலையான அவரை எதிர்வரும் 7 ஆம் திகதிவரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
Very good job for him.
ReplyDelete