48 மணி நேரத்தில் சீனாவிலிருந்து அழைத்து, வரப்படவுள்ள 150 இலங்கை மாணவர்கள்
கொரோனா வைரஸ் தொற்று பரவிவரும் சீனாவின் வுஹான் மற்றும் சிச்சுஹான் மாநிலங்களில் வசிக்கும் மாணவர்கள் உள்ளிட்ட அனைத்து இலங்கையர்களையும் உடனடியாக மீள நாட்டுக்கு அழைத்து வருவதற்கான சட்ட ஏற்பாடுகளை செய்யுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆலோசனை வழங்கியுள்ளார்.
இதற்காக ஜனாதிபதி செயலகம், வௌிவிவகார அமைச்சு, சுகாதார அமைச்சு, பீஜிங்கில் அமைந்துள்ள இலங்கைக்கான தூதரகம் மற்றும் ஶ்ரீ லங்கன் விமான சேவை இணைந்து விசேட செயற்றிட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளன.
வுஹான் மாநிலத்தில் இருந்து வௌியேறுவதற்கும் மற்றும் உள்நுழைவதற்கும் தற்போதைய நிலையில் தடை விதிக்கப்பட்டுள்ளது.
குறித்த தடையை நீக்கி உடனடியாக அங்கிருக்கும் இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்து வர அனைத்து சட்ட ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
சிச்சுவான் மாநிலத்தில் வசிக்கும் சுமார் 150 இலங்கை மாணவர்களை எதிர்வரும் 48 மணித்தியாலங்களில் இந்நாட்டிற்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.
அதற்காக ஶ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான விசேட விமானத்தை பயன்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக வௌியுறவு தொடர்பான ஜனாதிபதி மேலதிக செயலாளர் அத்மிரால் ஜயனாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.
நபி(ஸல்) அவர்களின் துணைவியாரான ஆயிஷா(ரலி) கூறினார்:
ReplyDeleteநான் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் (பிளேக், காலரா போன்ற) கொள்ளை நோய் பற்றிக் கேட்டேன்.
அதற்கு அவர்கள், 'அது, தான் நாடியவர்களின் மீது அல்லாஹ் அனுப்புகிற வேதனையாகும்.
அல்லாஹ் அதை இறை நம்பிக்கையாளர்களுக்கு கருணையாக ஆக்கியுள்ளான்' என்று தெரிவித்தார்கள்.
மேலும், 'கொள்ளை நோய் பரவிய இடத்தில் இருப்பவர் எவராயினும் அவர் பொறுமையுடனும், இறைவெகுமதியை விரும்பியவராகவும் அல்லாஹ் நமக்கு எழுதியுள்ள (விதிப்படி நம்மைப் பீடிக்க விருப்ப)தைத் தவிர வேறெதுவும் நம்மைப் பீடிக்காது என்னும் நம்பிக்கை கொண்டவராகவும் தன் ஊரிலேயே தங்கியிருப்பாராயின் இறைவழியில் உயிர்த் தியாகம் செய்தவர் பெறுவதைப் போன்ற நற்பலன் அவருக்கும் நிச்சயம் கிடைக்கும்' என்று கூறினார்கள்.
ஸஹீஹ் புகாரி : 3474.
அத்தியாயம் : 60. நபிமார்களின் செய்திகள்