Header Ads



3 மாதங்களில் வைத்தியராக வர, இருந்தவருக்கு இறுதியில் இப்படி ஒரு கொடூரம்

யாழ்ப்பாணத்தில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் கொலை செய்யப்பட்ட பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவியின் சோகமான குடும்ப பின்னணி தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.

29 வயதான ரோஷினி காஞ்சனா என்ற மருத்துவபீட மாணவி தனது கணவரான இராணுவ சிப்பாயினால் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இது கோபத்தினால் நடந்த ஒரு கொடூர கொலையாகவே பார்க்கப்படுகின்றது.

பேருவளை, பதனாகொட பிரதேசத்தில் பிறந்த காஞ்சா, அதே பகுதியிலுள்ள பாடசாலை மற்றும் மேலதிக வகுப்பு சென்று கற்கை நடவடிக்கைகளை மிகவும் கடினமான சூழ்நிலையில் மேற்கொண்டுள்ளார். அவரது தந்தை மிகவும் கஷ்டத்திற்கு மத்தியில், குடும்பத்திற்காக அனைத்து தேவைகளையும் நிறைவேற்றிய ஒருவராகும்.

அவர் பிள்ளைகள் மீது அதிக அன்பு கொண்ட ஒருவராகும். உயிரிழந்த மாணவி பாடசாலையில் படிக்கும் காலப்பகுதியிலேனும் காதல் தொடர்புகளை ஏற்படுத்தி கொண்டவர் அல்ல என அயலவர்கள் தெரிவித்துள்ளனர். மிகவும் சிறப்பான ஒரு யுவதியாக அந்த பகுதியில் அவர் காணப்பட்டுள்ளார். அயலவர்களால் அதிகம் நேசிக்கப்பட்ட ஒருவராகும். அம்மா, அப்பா சகோதரர்களினால் அதிகம் நேசிக்கப்பட்ட தங்கமான மகள் ஒருவரே கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார் என அந்த பகுதியை சேர்ந்த அஜித் என்பவர் தெரிவித்து்ளார்.

“எனது மகள் மிகவும் நல்லவர். மிகவும் கஷ்டப்பட்டே எனது மகளை வளர்த்தேன். அவர் ஒரு போதும் தவறான வழியில் போகக்கூடியவர் அல்ல. எங்கள் விரும்பமின்றி அவர் ஒன்றையும் செய்துக் கொள்ளவில்லை. திருமணத்தின் போது மாத்திரமே விடாபிடியாக இராணுவ சிப்பாய் பிரதீப்பை திருமணம் செய்ய வேண்டும் என கூறினார். இறுதியில் அதற்கு நாங்கள் விருப்பம் தெரிவித்தோம்.

பிரதீப் அதே பிரதேசத்தை சேர்ந்தவராகும். பாலர் பாடசாலை முதல் நண்பர்களாக பழகியவர். எனினும் இருவருக்கும் இடையில் காதல் தொடர்பு ஒன்று இருக்கவில்லை. யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்திற்கு சென்ற பின்னரே காதல் தொடர்பு ஏற்பட்டது.

இரண்டு முறை விஞ்ஞான பிரிவில் உயர்தரப்பரீட்சைக்கு முகம் கொடுத்த மகள் வைத்தியராக வேண்டும் என் ஒரே இலக்கில் இருந்தார். அவ்வளவு தூரம் அவரது எதிர்பார்ப்பை நிறைவேற்ற போராடினோம். பல்கலைக்கழகம் சென்ற பின்னரே இராணுவ சிப்பாய் மீண்டும் பழக்கம் ஏற்படுத்தி அது காதலாக மாறியது.

தெற்கில் இருந்து யாழ்ப்பாணம் செல்பவர்கள் உடனடியாக அங்குள்ளவர்களுடன் நெருங்கி பழகிவிட மாட்டார்கள். இந்த நிலையில் சிறு வயது நண்பனின் பழக்கம் கிடைத்தால் நெருக்கம் ஏற்பட்டு விடும்.

அதற்கமைய இருவருக்கும் காதல் தொடர்பு ஏற்பட்டது. அந்த காலப்பகுதியில் பிரதீப் யாழ்ப்பாணம், பரந்தன் இராணுவ முகாமின் வைத்திய படையில் இணைந்து செயற்பட்டு வந்துள்ளார். அதன் பின்னர் இருவரும் திருமண பந்தத்தில் இணைந்தார்கள். திருமணத்தின் பின்னர் இருவரும் பிரதீப்பின் தாயாரின் வீட்டிலேயே வசித்து வந்தார்கள்.

திருமணம் செய்து ஒரு வருடத்தின் பின்னரே பிரச்சினைகள் ஆரம்பித்தது. ஒரு முறை வாயில் இருந்து இரத்தம் வரும் அளவிற்கு பிரதிப் மகளை தாக்கியிருந்தார். அதன் பின்னர் தொடர்ந்து பிரச்சினைகள் ஏற்பட ஆரம்பித்தது.

அதன் பின்னர் மகள் எங்கள் வீட்டிற்கு வந்து விட்டார். ஏன் என வினவிய போது, எங்களுடன் பேசக்கூடாதென பிரதீப் உத்தரவிட்டதாகவும் அந்த உத்தரவை மீறி பெற்றோருடன் பேசியதனால் பிரச்சினை ஏற்பட்டதாகவும் மகள் கூறினார். அதன் பின்னர் ஒரு வருட காலம் இருவரது தொடர்பில் முறிவு ஏற்பட்ட நிலை காணப்பட்டது.

எனினும் மீண்டும் பிரதீப் பிரச்சினை ஏற்படுத்த ஆரம்பித்தார். இதனால் மகள் விவாகரத்து வழக்கு தாக்கல் செய்யதார். கணவனின் கொடுமைகளை அவரால் தாங்கிக் கொள்ள முடியாமல் போன போதிலும் அவர் தனது மருத்துவ படிப்பை தொடர்ந்தார்.

இந்நிலையிலேயே கொலை நடந்தது. 3 மாதங்களில் வைத்தியராகி வீட்டிற்கு வருவதற்கு அவர் எதிர்பார்ப்புடன் இருந்தார். கடந்த ஞாயிற்றுக்கிழமை வீட்டிற்கு வந்த மகள் இன்னும் 3 மாதங்களில் டொக்டர் காஞ்சனா என்ற பெயரில் வீட்டிற்கு வருவேன் என கூறி சென்றார். இறுதியில் இப்படி ஒரு கொடூரம் நடந்து விட்டது” என காஞ்சனாவின் தந்தை கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.

1 comment:

  1. Mismatch ,even a Doctor could not diagnose it beforehand.

    ReplyDelete

Powered by Blogger.