26 ஆம் திகதி சஜித்தின், முக்கிய அறிவிப்பு வெளியாகிறது
எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச எதிர்வரும் 26ஆம் திகதி தனது எதிர்கால அரசியல் நிலைப்பாட்டை விளக்கவுள்ளார்.
இந்த தகவலை நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
இது தொடர்பான நிகழ்வு கொழும்பு கண்காட்சி மண்டபத்தில் நடைபெறவுள்ளது என்றும் அவர் தெரிவித்தார். அன்றைய தினம் நிகழ்வில் பங்கு கொள்ளுமாறு ஐக்கிய தேசிய முன்னணியின் அனைத்து தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது தாம் பொதுத்தேர்தலில் வெற்றி பெற்று பிரதமரானால், நாட்டுக்காக மேற்கொள்ளப் போகும் திட்டங்கள் தொடர்பில் சஜித் அறிவிக்க உள்ளதாக அஜித் பெரேரா குறிப்பிட்டார்.
இதேவேளை கோட்டாபய ஜனாதிபதியாக இருக்கும் போது சஜித் பிரதமரானால் ஆட்சியை நடத்தி செல்லமுடியாது. ரணில்-மைத்ரி ஆட்சியை போலவே இருக்கும் என்ற கருத்தை மறுத்த அஜித் பெரேரா தனிப்பட்ட எண்ணங்களின் செல்வாக்கு காரணமாகவே அந்த ஆட்சி சிறப்பு பெறவில்லை என தெரிவித்துள்ளார்.
Paawam ivar.. eththanai mukkiya arivippugalai veliyittu vittar.. vetri peraththan mudiyavillai.
ReplyDelete