Header Ads



பௌசியை 1 மணித்தியாலத்திற்காவது, உள்ளே போட ரஞ்சன் வலியுறுத்தினார்

முன்னைய ஆட்சியில் பொய்யான அரசியலைப்பு பேரவை மூலமாக நியமிக்கப்பட்ட சட்டமா அதிபர் தப்புல டி லிவேராவை வைத்துக்கொண்டு தொடர்ந்தும் பயணிக்க முடியாது.

ரஞ்சன் ராமநாயகவுடன் தொலைபேசி உரையாடலில் தொடர்புபட்ட சில நீதிபதிகள் இருக்கின்ற நிலையில் நீதிபதி கிஹான் பிலப்பிட்டியவை கைதுசெய்ய கூறுவது ஏன் என சபையில் கேள்வி எழுப்பிய அமைச்சர் விமல் வீரவன்ச நீதிபதி கிஹான் பிலப்பிட்டியவை கைதுசெய்ய சட்டமா அதிபர் கூறியபோது கைது செய்யும் நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்துமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.

அவரை கைதுசெய்ய இடமளித்தால் நீதித்துறைக்கு ஏற்படும் பாரதூரமான அச்சுறுத்தலாகும் எனவும் கூறினார். 

பாராளுமன்றத்தில் இன்று காலஞ்சென்ற ரீ.ரஞ்சித் சொய்சா தொடர்பான அனுதாப பிரேரணையின் போது உரையாற்றும் போதே அமைச்சர் இந்த காரணிகளையும் கூறினார்.

அவர் மேலும் கூறுகையில். 

கடந்த காலங்களில் சட்டம் செயற்பட்ட முறையை எவ்வாறு என்பதை நாம் அவதானித்தோம். சபாநாயகரின் தலைமையில் கூடும் அரசியலமைப்பு பேரவையென ஒன்று உள்ளது.

அப் பேரவையினால் பரிந்துரைக்கப்பட்ட சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா தற்போதும் சட்டமா அதிபராக உள்ளார்.

அவர் கூறியதற்கு அமைய ரஞ்சித் சொய்சா போன்றவர்களை கைது செய்து விளக்க மறியலில் வைக்குமாறு கோரும் போது அதனை முன்னைய ஆட்சியில் செய்தார்கள்.

அதே சட்டமா அதிபரினால் நேற்று நீதிபதி கிஹான் பிலபிட்டியவை உடனடியாக கைது செய்யுமாறு வலியுறுத்தியுள்ளார். சட்டமா அதிபர் ஏன் அப்படி கூறினார் என தெரியவில்லை.

நீதிபதி கிஹான் பிலபிட்டியவை விடவும் வேறு நீதிபதிகள் சிலர் ரஞ்சன் ராமநாயகவுடன் பேசிய உரையாடல் பதிவுகள் உள்ளது.  கடுவலை முன்னாள் நீதவானே அவர். ரஞ்சன் ராமநாயக்க எம்.பி தனது நீதிமன்ற செயற்பாடுகளுக்கு அழுத்தம் கொடுத்தார் என முறையிட்ட கிஹான் பிலப்பிட்டியவை கைது செய்யுமாறு உத்தரவிடுகின்றார்.

உண்மையில் கிஹான் பிலப்பிட்டிய ரஞ்சன் ராமநாயக்கவுடன் மேற்கொள்ளும் தொலைபேசி உரையாடலில் ரஞ்சன் ராமநாயக்கவின் கோரிக்கையை அவர் நிறைவேற்றவில்லை.

பௌசியை ஒரு மணித்தியாலத்திற்காவது உள்ளே போடுமாறே அவர் கேட்கின்றார். அதனை அவர் நிறைவேற்றவில்லை. இதன்பின்னர் அவரே இது  தொடர்பாக முறையிடுகின்றார். முறையிட்டவரை எப்படி சிறையில் போட முடியும். இவரான நபர்களுடன் கடந்த காலங்களில் பயணித்தோம். இன்னும் இவ்வாறான சட்டமா அதிபரை வைத்துக்கொண்டு எவ்வாறு பயணிக்க முடியும் என அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

2 comments:

  1. நாடகத்தின் பல்வேறு கட்டங்கள்,தடைகள், இவைகள் இந்த நாட்டு மக்களின் கோரிக்கையல்ல. எந்த காரணங்களுக்காக மக்கள் சனாதிபதியைத் தெரிவு செய்தார்களோ அந்த காரணங்கள் நிச்சியம் சனாதிபதிக்கு நன்றாக நினைவிருக்கும் அவற்றை நிறைவேற்ற நடவடிக்ைக எடுத்தால் அதைத்தான் இந்த நாட்டு மக்கள் எதிர்பார்ப்பது.

    ReplyDelete

Powered by Blogger.