Header Ads



Z - Score மாவட்ட முறைக்கு பதிலாக பாடசாலை ரீதியில், புதிய முறையை அறிமுகப்படுத்த திட்டம்

Z-Score முறையின் அடிப்படையில் பல்கலைகழகத்திற்கு மாணவர்களை தெரிவு செய்வதற்காக தற்போது பயன்படுத்படுத்தப்படும் மாவட்ட ரீதியிலான முறைக்கு பதிலாக, பாடசாலை ரீதியில் புதிய முறை ஒன்றினை அறிமுகப்படுத்த அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. 

அனைத்து மாணவர்களுக்கும் சமமான முறையில் கல்வியினை வழங்குவதற்காக அரசாங்கத்தின் தலைமையில் தற்போது மாகாண, மாவட்ட மற்றும் பாடசாலை ரீதியல் பல்வேறு வேறுபாடுகள் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. 

இதனால் இந்த புதிய முறையினை அறிமுகப்படுத்துவதற்காக கல்விமான்கள் உள்ளடங்கிய குழு ஒன்றினை நியமிப்பதற்கு கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெரும முன்வைத்த பிரேரணைக்கும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

No comments

Powered by Blogger.