Header Ads



பௌத்த அடிப்படையை UNP பாதுகாக்க, முஸ்லிம் கட்சிகள் போட்டியிடுகின்றனவா...?

எதிர்வரும் பொதுத் தேர்தலில் சிறுபான்மை கட்சிகள் தனித்து போட்டியிடத் தீர்மானித்துள்ளதாக தெற்கு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ஐக்கிய தேசிய முன்னணியில் அங்கம் வகித்த சிறுபான்மை கட்சிகள் பல தனித்து போட்டியிடத் தீர்மானித்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஸ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

முஸ்லிம் சமூகத்தைப் பிரதிநிதித்துவம் செய்யும் சிறுபான்மை கட்சிகளும், தமிழ் சமூகத்தைப் பிரதிநிதித்துவம் செய்யும் சிறுபான்மை கட்சிகளும் இவ்வாறு தேர்தலில் தனித்துப் போட்டியிடத் தீர்மானித்துள்ளன.

ஐக்கிய தேசியக் கட்சியின் சிங்கள பௌத்த அடிப்படையை பாதுகாத்துக் கொள்ள வேண்டுமாயின் கட்சி தனித்து போட்டியிட வேண்டுமென கட்சியின் ஆலோசகர்கள் தெரிவித்துள்ளனர்.

தேர்தலின் போது ஐக்கிய தேசியக்கட்சி தனித்தும், சிறுபான்மை கட்சிகள் தனித்தும் போட்டியிட வேண்டுமென வலியுறுத்தியுள்ளனர்.

இதன்படி தேர்தலில் தனித்து போட்டியிட்டு பின்னர் இந்தக் கட்சிகள் ஒரே கூட்டணியாக செயற்படுவதற்கு திட்டமிட்டுள்ளன.

2 comments:

  1. முஸ்லீம் கட்சிகள் ஐக்கிய தேசிய கட்சியின் முஸ்லீம் பிரிவுகளாகவே செயட்பட்டு வருகின்றார்கள்

    ReplyDelete
  2. இலங்கையின் கட்சி வரலாறு தெரிந்தவர்களுக்கு இது ஆச்சரியமாக இருக்காது. வெற்றிக்காக, ஒரு கட்சியை விட மற்ற கட்சி இனவாதத்தை அதிகம் பேசியே அதிகாரங்களைக் கைப்பற்றியுள்ளனர். இலங்கையில் சிங்களவர்கள் மட்டும்தான் வாழ வேண்டும் மற்றவர்கள் எல்லோரையும் நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என்று unp சொன்னால் சிங்களவர்கள் வாக்களிப்பார்கள். அந்தளவிற்கு இனவாதம் புரையோடிப்போய் இருக்கிறது.

    ReplyDelete

Powered by Blogger.