UNP யின் தோல்வி நிரந்தரமானது அல்ல
ஐக்கிய தேசிய கட்சியின் தோல்வி நிரந்தரமானது அல்ல என்று நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி.பெரேரா தெரிவித்துள்ளார்.
பண்டாரகமவில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் வைத்து அவர் இதனைக் கூறியுள்ளார்.
கடந்த ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி தோல்வியுற்றது உண்மைதான்.
ஆனால் அரசியல் வரலாற்றில் தோல்வி என்பது நிரந்தமானது இல்லை.
ஜனாதிபதி வேட்பாளர் நியமனத்தின் போது ஐக்கிய தேசிய கட்சி பிளவடைந்துவிடும் என்று கூறப்பட்ட போதும், அதில் இருந்து கட்சி மீண்டது.
அதேபோல எதிர்கட்சித் தலைவர் விடயத்திலும் சுமுகமான தீர்வு எட்டப்பட்டது.
எதிர்கட்சித் தலைவர் பதவி தொடர்பாக ஏற்பட்டிருந்த இழுபறி நிலைமையை தீர்த்துக்கொண்டதைப் போலவே, ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைத்துவப் பதவி குறித்த பிரச்சினையும் தீர்த்துக் கொள்ளப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment