UNP சந்தர்ப்பம் வழங்காவிடின் சுயாதீனமாக போட்டியிடுவேன், மக்கள் வாக்களிக்காவிட்டால் நடிப்புதுறைக்கு திரும்புவேன்
ஐக்கிய தேசியக் கட்சியினால் தமக்கு சந்தர்ப்பம் வழங்கப்படாவிட்டால் சுயாதீனமான அடிப்படையில் தேர்தலில் போட்டியிடுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி தமக்கு சந்தர்ப்பம் வழங்காவிட்டால் இவ்வாறு மாற்று வழியைத் தெரிவு செய்ய நேரிடும் என இன்று அவர் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.
தாம் எந்தவொரு பிழையையும் செய்யவில்லை எனவும் எனவே தமக்கு வேட்பு மனு வழங்காதிருக்க அவசியமில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
போதைப்பொருள் கடத்தவில்லை, மத்திய வங்கியை கொள்ளையிடவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தாம் இந்த நாட்டு பௌத்த பிக்குகளை எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இழிவுபடுத்தியதில்லை என என அவர் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியில் போட்டியிட முடியாவிட்டால் சுயாதீனமாக போட்டியிடுவதாகவும் மக்கள் வாக்களிக்காவிட்டால் மீண்டும் நடிப்புத் துறைக்கு திரும்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment