Unp யின் தலைமைத்துவ மீளமைப்பு - 6 பேர் கொண்ட குழு நியமனம்
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவம் மற்றும் மீளமைப்பு தொடர்பில் 6 பேர் கொண்ட குழு ஒன்று ஆராயவுள்ளது. இந்தக்குழு தமது அறிக்கையை கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிடம் சமர்ப்பிக்கவுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர்களான ரஞ்சித் மத்தும பண்டார, தலதா அத்துகோரள, ஆசு மாரசிங்க, வஜிர அபேகுணவர்த்தன, லச்மன் கிரியெல்ல மற்றும் மலிக் சமரவிக்கிரம ஆகியோர் இந்தக்குழுவில் அடங்கியுள்ளனர்.
இதேவேளை எதிர்க்கட்சி தலைவராக ஐக்கிய தேசியக்கட்சி ஏற்கனவே சஜித் பிரேமதாஸவை ஏற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில் எதிர்வரும் பொதுத்தேர்தலில் கட்சி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையிலேயே போட்டியிடும் என்று கட்சியின் செயலாளர் அகில விராஜ் காரியவசம் இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Post a Comment