Header Ads



UNP ஒன்றிணைந்து செயற்பட்டால் 113 ஆசனங்களை பெறும் - கட்சியில் பதவியில் காலந்தோறும் ஒட்டியிருக்க மாட்டேன்

ஐக்கிய தேசிய கட்சியின் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட்டால் எதிர்வரும் பொதுத்தேர்தலில் 113க்கும் மேற்பட்ட ஆசனங்களை நாடாளுமன்றில் பெற்றுக்கொள்ளலாம் என முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டார்.

ஐக்கிய தேசிய கட்சியின் யாப்பிலும் மாற்றங்களை முன்னெடுக்க தாம் தீர்மானித்துள்ளதாக இன்று -16- கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது முன்னாள் பிரதமர் தெரிவித்துள்ளார்.

தமது கட்சி நாட்டில் நடுத்தர மக்களையும், மகாசங்கரத்தினரையும் மறந்துவிட்டதாகவும் அதன் காரணமாக இம்முறை ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி தோல்வியடைந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

எனவே அனைவரும் ஒன்றிணைந்து கிராமங்களுக்கு சென்று நாட்டில் நடுத்தர மக்களை சந்தித்து தெளிவு படுத்தினால் நாடாளுமன்ற தேர்தலில் கண்டிப்பாக வெற்றிபெற முடியும் எனவும் முன்னாள் பிரதமர் தெரிவித்தார்.

அவ்வாறு செய்வதன் மூலமே ஐக்கிய தேசிய கட்சியின் எதிர்காலம் தங்கியிருப்பதாக அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

சஜித் பிரேமதாச ஜனாதிபதி தேர்தலில் தோல்வியடைவார் என்பது அப்போதே தெரியும் என குறிப்பிட்ட அவர் அத்தருணத்தில் காணப்பட்ட முரண்பாடுகளை சரிசெய்துகொள்ள நடவடிக்கை எடுத்திருந்தால் இந்த நிலைமை மாற்றமடைந்திருக்கும் எனவும் கூறினார்.

தாம் இந்த கட்சியின் பதவியில் காலந்தோறும் ஒட்டியிருக்க போவதில்லை என தெரிவித்த முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கட்சியை புதிய முகங்கள் பொறுப்பேற்க முன்வரவேண்டும் எனவும் அந்த சந்தர்ப்பத்தை தாம் வழங்க தயாராக இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

3 comments:

  1. கட்சியைப் பொறுப்பேற்க ஏற்கனவே புது முகங்கள் வந்து தான் இருக்கிறார்கள்.நீங்கள் தான் கொடுக்க மறுக்கிறீர்கள்.நீங்கள் சொல்வது போல் ஜனாதிபதித் தேர்தலில் நீங்களும் உங்கள் சார்ந்த சிலரும் ஒற்றுமையாய் ஸஜித்தின் வெற்றிக்கு உழைத்திருந்தால் வெற்றியடைய முடிந்திருக்கும்.

    ReplyDelete
  2. You resign and go home everythings will be ok.

    ReplyDelete
  3. தோல்விகரமான எல்லாவற்றையும் சஜித்தின் தலையில் சும்த்தி ரணில் சஜித்தை அதிஸ்ட்டமில்லாதவர் எனகிற தோற்றத்தை உருவாக்கிவிட்டார். அமைப்பு ரீதியான அரசியல் தெரியாதவர்களை சிறுபாண்மை இன தலைவர்கள் நம்புவதுதான் ஆச்சரியம். இதனால் மோசமாகப் பாதிக்கபட்டவர் மனோதான். சஜித்தைவிட கூட்டமைப்புத்தான் கொழும்பின் அவரது ஆதரவு தழத்தையும் வெற்றியையும் தக்க வைத்துக்கொள்ள முக்கியம் என்பதை அவர் இன்னும் உணரவில்லை என்பதுதான் சோகம்.

    ReplyDelete

Powered by Blogger.