SLMC, ACMC, NFGG ஒரே அணியில் பாராளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ள வேண்டும் - ஹரீஸ்
- Anzir -
முஸ்லிம் கூட்டமைப்பை ஒன்றை வலியுறுத்திய மு.கா. பிரதித் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ஹரீஸ் இதன்மூலம் முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை பாதுகாத்துக்கொள்ள முடியுமெனவும் சுட்டிக்காட்டினார்..
இதுதொடர்பில் Jaffna Muslim இணையத்திற்கு அவர் மேலும் தகவல் தருகையில்,,
பெரும்பான்மை சிங்கள மக்களின் வாக்குகளுடன், தற்போது கோத்தாபய ஆட்சியதிகாரத்திற்கு வந்துள்ளார்.
எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலிலும், மக்கள் இதே நிலைப்பாட்டை மேற்கொள்வார்களாயின், மகிந்த தரப்பு பெரும்பான்மையை பெற்றுக்கொள்ளும்.
அதுபோன்று முஸ்லிம் தரப்பு பிரிந்து கேட்பதால், வாக்குகள் சிதறுண்டு, பேரப் பேசும் சக்தியை இழந்துவிடும் துர்ப்பாக்கியம் ஏற்படும்
இதனை தடுக்க வேண்டுமாயின், முஸ்லிம் தரப்பினர் ஓரணியில் திரண்டு சமயோசிதமாக செயற்பட்டால், தமது பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை காப்பாற்றிக்கொள்ள முடியும். சமூகமும் வலுவடையும்.
இதுவிடயத்தில் முஸ்லிம் சமூகத்தில் தெளிவையும், முஸ்லிம் அரசியல்வாதிகளிடையே அழுத்தத்தை பிரயோகிக்கும் வகையிலும் Jaffna Muslim இணையம் போன்ற ஊடகங்கள் செயற்பட வேண்டும்.
அந்தவகையில் SLMC, ACMC, NFGG போன்ற கட்சிகள் கூட்டணியமைத்து செயற்படுவது அவசியமாகும் என்றார்.
உண்மை,அனைத்து கட்சிகளும் ஒன்ரு படவேண்டும்.அப்படி இல்லாமல் பிரிந்து போய் தேர்தலினை சந்திக்க முற்படுவார்கலாயின் மக்கள் அவர்களை நிராகரிக்க வேண்டும்.எனவே ஒரு தமிழர் கூட்டணி போல் எமக்கு ஒரு முஸ்லிம் கூட்டனி காலத்தின் தேவையாகும்.எனவே மக்களுக்காக இவர்கள் இணைய வேண்டும் இல்லா விட்டால் மக்கள் இவர்களை நிராகரித்து விட்டு பெரும்பாண்மை கட்சிகளுக்கு வாக்களிப்பது சிறப்பானது 1980 க்கு முன்பு போல்.எனவே,அனைத்து முஸ்லிம் கட்சிகளும் சிறந்த முடிவை விரைவாக எடுக்க வேண்டும்.ஏனெனில் தேர்தலுக்கு இன்னும் இருப்பது 3 மாதம் மட்டுமே.
ReplyDeleteநல்ல யோசனை. நீங்கள் ஒன்று பட்டு பலத்தைக் காட்டினால் நாங்கள் அச்சப்பட மாட்டோம் நாங்களும் உங்களை விட்டுத்தூர விலகுவோம் என்ற செய்தியைச் சொல்ல வேண்டும். அச்செய்தியில் நீங்கள் நெருங்கி வந்தால் நாங்களும் நெருங்கி வருவோம் என்ற செய்தியும் அடங்கும்.
ReplyDeleteமுஸ்லிம் கட்சிகள் மாத்திரமன்றி தமிழ் கட்சிகளும் ஒரே அணியில் நின்றால் நிச்சயம் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியாக வரமுடியும் , சற்று இவ்விடயம் பற்றியும் தமிழ் முஸ்லிம் தரப்பு கலந்தாலோசனை செய்யலாமே
ReplyDeleteஜனாப் ஹரீஸ் அவர்களின் அறிக்கை மிக மிக வியப்பானதாக இருக்கின்றது. முஸ்லிம் கூட்டமைப்பினை உருவாக்குவதாக இருந்தால் அது யார் யார் முஸ்லிம் காங்கிரஸில் 2000ம் ஆண்டில் இருந்தரர்களோ அவர்களை வைத்துத்தான் ஆரம்பிக்கப்படல் வேண்டும். அதனை விட்டுவிடடு உங்களுடைய சொந்தக் கருத்திற்கு கட்சியை மீளமைத்து அதனைச் சீரழிக்கமுடியாது. என்ன காரணத்திற்காக NFGG ஐ இணைக்கவேண்டும் என்ற கருத்தினை முன்வைக்கின்றிர்கள் என்பது பெரும் புதிராக இருக்கின்து. சென்ற பாராளுமன்றத் தேர்தலில் NFGG ஐ திருகோணமலை மாவட்டத்தில் ஒரு இணை அபேட்சகராக நியமித்து இலேசாக கிடைத்திருக்க வேண்டிய உறுப்புரிமையை இழந்து மூக்குடைபட்டதனை மறந்தா போய்விட்டீர்கள். கட்சியினால் விரட்டப்பட்ட சேகு இஸ்ஸதீன், ஹிஸ்புல்லாஹ், அதாவுல்லா, Ferial ஹசனலி பஷீர் மகறூப் அமீர்அலி போன்ற இன்னும் பலரை முதலில் கட்சியில் உள்வாங்கி கூட்டமைப்பை உருவாக்கிப் பலப்படுத்தப் பாருங்கள். இதன் பின்னர் இன்னும் உங்களுக்கு ஆட்கள் தேவைப்பட்டால் யார் யார் முஸ்லிம் காங்கிரஸை விட்டும் விரட்டப்பட்டார்களோ ஓரம் கட்டப்பட்டார்களோ கட்சியின் அடாவடித்தனத்தினால் ஓடி ஒழிந்து அரசியல் துறவரம் பூண்டார்களோ அவர்களையும் இணைக்கப் பாருங்கள். இதேபோக்கில் நீங்களும் தொடர்ந்து அரசியல் பயணம் செய்தால் இருப்பதையும் இழந்து விடக்கூடிய சந்தர்ப்பம் ஏற்படும் என்பதனை மறந்து விடவேண்டாம். முஸ்லிம் மக்களின் நலனை மாத்திரமே முன்வைத்து அரசியல் காய்களை சாதுரியமாக நகர்த்தப் பாருங்கள். அது ஒருபோதும் தவறாகாது. கடந்த ஜனாதிபதித் தேர்தலில் காட்டிய திருவிளையாடல்களை வரும் பாராளுமன்றத் தேர்தலிலும் காட்டி யாருடைய நலனிற்காகவோ முஸ்லிம் சமூகத்தின் இருப்பை மேலும் கேள்விக்குள்ளாக்க முயற்சிக்க வேண்டாம் என்று தயவாகக் கேட்டுக் கொள்கின்றேன். இறுதியாக மாமனிதர் அஷ்ரப் அவர்கள் முஸ்லிம் காங்கிரஸை தன்னுயிரைக் கொடுத்து உருவாக்கியது கிழக்கு முஸ்லிம் மக்களின் அரசியல் உரிமைகளைப் பாதுகாக்கவேயன்றி பணம் படைத்தவர்களின் பதவி நாற்காலி ஆசைகளை தீர்ப்பதற்காக அல்ல என்பது முதலில் புரிந்து கொள்ளப்பட வேண்டியதாகும். அதிகாரத்திலுள்ளவர்களின் அடாவடித்தனத்தினால் (outrage) கட்சியை விட்டும் தூரமாக்கப்பட்ட கட்சிக்காக உயிரைக் கொடுத்த உண்மைப் போராளிகள் எண்ணிறந்தோர் நாட்டின் பல பாகங்களிலும் மாகாண மாவட்ட தொகுதிகள் எங்கிலும் செறிந்து காணப்படுகின்றனர். இவர்களுக்கு உங்கள் இவ்வறிக்கை என்ன ஆறுதலை வழங்கப் போகின்றது. எல்லா முஸ்லிம்களும் என்னInterNet ஐயா பயன்படுததுகின்றனர்.
ReplyDeleteமுஸ்லீம் காங்கிரஸ் தலையமைத்துவதில் மாற்றம் ஏட்பட வேண்டும் .அப்போதுதான் அனைவரையும் ஒன்று சேர்க்க முடியும்
ReplyDeleteநான் நினைக்கவில்லை இது நடக்குமென்று. இம்முறை நிச்சயமாக ராஜபக்சேக்களின் ஆட்சிதான் வரும். தமிழ் , முஸ்லீம் மக்கள் ஒரு பக்கம் இருந்தால் , நிச்சயமாக சிங்கள மக்கள் ஓரணியில் திரண்டு சிங்கள ஆட்சியை கொண்டு வருவார்கள். எனவே முஸ்லீம் கட்ச்சிகள் எப்படி அவர்களுடன் இணையமுடியும் என்றுதான் பார்ப்பார்கள். நிச்சயமாக றிஷார்டை அவர்கள் எடுக்கமாட்ட்டார்கள். ஹக்கீம் அவர்கள் ராஜபக்ஷேவுடன் இணைய சந்தர்ப்பம் இருக்கிறது. எனவே நீங்கள் எதிர்பார்க்கும் ஒற்றுமை மிகவும் சிக்கலான விடயம். அத்தத்துடன் அதாஉல்லா இவளவு காலமும் எதிர்க்கட்சியில் இருந்து விட்டு முஸ்லீம் கூடடணியில் இணைவார் என்று எதிர்பார்க்கமுடியாது.
ReplyDeleteரிசாத்தும் ஹக்கீமும் முஸ்லிம் சமூகத்தின் தலைவர்கள் அல்லர். முஸ்லிம் சமூகத்திற்கான தலைவர்கள் நாடு முழுக்க பரந்து இருக்கின்றார்கள். அவர்கள் சமூக நலனிற்காக ஒன்று சேர்ந்து முஸ்லிம்களின் அரசியல் தலைவர்கள் என்று சொல்லப்படுபவர்கள் அனைவரையும் அழைத்து பொதுவான அம்சங்களை முன்னிறுத்தி பேச்சு வார்த்தை நடாத்தி திட்டங்களை வகுத்துச் செயற்படல் வேண்டும். சமூக நலன் முன்னிறுத்தப்படல் வேண்டும். இல்லாவிட்டால் எதிர்காலம் சூனியமாவதற்கு சமூகத் தலைவரகள்தான் பதிலளிக்க வேண்டும்.
ReplyDelete