O/L பரீட்சை இறுதி நாளன்று கலகம் விளைவித்தால், பெறுபேறு இடைநிறுத்தப்படுமென எச்சரிக்கை
கல்விப் பொதுத் தராதரப் பத்திர சாதாரண தரப் பரீட்சை நிறைவடையும் எதிர்வரும் வியாழக்கிழமை (12), பரீட்சைகள் நிறைவடைந்த பின்னர் அமைதியாக கலைந்து செல்லுமாறு பரீட்சைகள் திணைக்களம் மாணவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
பரீட்சை மண்டபம் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் கலகம் விளைவிக்கும் வகையில் நடந்துக்கொண்டால், பரீட்சைகள் சட்டத்துக்கு அமைய கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என, அந்த திணைக்களம் கூறியுள்ளது.
பரீட்சைகள் நிறைவடைந்த பின்னர் பொதுச்சொத்துகளுக்கு சேதம் விளைவிக்கும் வகையில் நடந்துகொண்டால், பெறுபேறுகளை நிறுத்திவைக்கும் அளவுக்கு நடவடிக்கை எடுக்க முடியும் என்றும் அந்த திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
இது தொடர்பில் அனைத்து பரீட்சை நிலையங்களுக்கும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
கல்விப் பொதுத் தராதரப் பத்திர சாதாரண தரப் பரீட்சை நிறைவடையும் எதிர்வரும் வியாழக்கிழமையன்று பரீட்சை நிலையங்களை அண்மித்த பகுதிகளில் பொலிஸ் நடமாடும் சேவை முன்னெடுக்கப்படும் என்றும் அந்த திணைக்களம் அறிக்கையொன்றை வெளியிட்டு கூறியுள்ளது.
Post a Comment