பௌசி நீக்கம், Mp ஆகி, அமைச்சராக மைத்திரி திட்டம் - கொழும்பு ஊடகம் தகவல்
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம்.பௌசி கட்சி உறுப்புரிமையில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு பதிலாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நாடாளுமன்ற உறுப்பினராக நியமிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பௌசியின் உறுப்பிரிமையை நீக்குமாறு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியினால் நாடாளுமன்ற செயலாளருக்கு கடிதம் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அந்த கடிதம் தனக்கு கிடைத்துள்ளதாக நாடாளுமன்ற செயலாளர், மஹிந்த அமரவீரவிடம் அறிவித்துள்ளார்.
அதற்கமைய எதிர்வரும் நாட்களில் மைத்திரிபால சிறிசேன நாடாளுமன்ற உறுப்பினராக பதவிப் பிரமாணம் செய்து கொள்ள தயாராகி வருவதாக குறிப்பிடப்படுகின்றது.
நாடாமளுன்றத்திற்கு வந்த பின்னர் அவருக்கு அமைச்சரவை அமைச்சர் பதவி ஒன்று கிடைக்கும் என உயர்மட்ட தகவல் வட்டாரங்களை மேற்கோள் காட்டி கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
Post a Comment