Header Ads



பாராளுமன்றத் தேர்தலிலும் திசைகாட்டிச் சின்னத்தில் போட்டியிட JVP தீர்மானம்

எதிர்வரும் பொதுத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி கூட்டணி திசைக்காட்டி சின்னத்தில் போட்டியிடும் என மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் விடுதலை முன்னணியுடன் இணைந்து செயற்பட்ட அனைவரையும் இணைத்துக்கொண்டு பொதுத் தேர்தலில் திசைக்காட்டி சின்னத்தில் போட்டியிட உள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் பிரசார செயலாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் பொதுத் தேர்தலை எதிர்நோக்க தேவையான பொறிமுறையை ஏற்கனவே உருவாக்கியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

No comments

Powered by Blogger.