ஐதேக தலைமைத்துவத்திற்கு யார், வந்தாலும் அந்த கட்சி வெற்றிப்பெறாது - JVP
பாராளுமன்றத்தில் எதிர்க் கட்சியின் உண்மையான வகிபாகத்தை தேசிய மக்கள் சகதியால் மாத்திரமே வகிக்க முடியும் என மக்கள் விடுதலை முன்னணியின் அரசியல் குழு உறுப்பினர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
அநுராதபுரத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்...
´ரணில் இல்லை என்றால் அது குறித்து ஐக்கிய தேசியக் கட்சி தீர்மானம் எடுக்க முடியாது. சஜித் பிரேமதாச தோல்வியடைவார் என ஏற்கனவே ரணில் கூறியதை நாம் கேட்டோம்.
அப்படி அவருக்கு தெரிந்திருந்தால் ஏன் நாட்டு மக்களின் பணத்தை செலவு செய்து தேர்தலை நடத்த வேண்டும்.
அவ்வாறு முன்கூட்டியே விடயத்தை அறிந்துக்கொண்ட அவர் தற்போது அந்த கட்சிக்குள் பதவியை பெறுவது தொடர்பில் போராடுகின்றார்..
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவத்திற்கு யார் வந்தாலும் அந்த கட்சி வெற்றிப்பெறாது. அதனால் பாராளுமன்றத்தில் எதிர்க் கட்சித் தலைவர் பதவியை தேசிய மக்கள் சக்திக்கு பெற்றுக்கொடுங்கள்.
அப்படி வழங்கினால் அரசாங்கம் மக்களுக்கு ஆற்றுவதாக கூறிய சகல விடயங்களையும் செயற்படுத்த நாம் அழுத்தங்களை பிரயோகிப்போம்.´ என்றார்.
Post a Comment