Dr சாபியின் வழக்கு தற்போது, பக்கச்சார்பின்றி முன்னெடுக்கப்படுகிறது - அத்துரலிய ரதன தேரர்
தேசப்பற்றுள்ள நாட்டு மக்களின் ஆதரவைப்பெற்று ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டிருக்கும் கோட்டாபய ராஜபக்ஷ, அமெரிக்காவுடனான மிலேனியம் சவால் தேசத்துரோக உடன்படிக்கையில் ஒருபோதும் கைச்சாத்திடக் கூடாது என நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரதன தேரர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் மிலேனியம் சவால் உடன்படிக்கையில் கைச்சாத்திடும் நடவடிக்கைகளை புதிய அரசாங்கம் மேற்கொள்வதாக பல்வேறு தரப்பினரும் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றனர்.
இந்நிலையில் இவ்விடயம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரதன தேரர் இதனை தெரிவித்தார்.
புதிய அரசாங்கம் ஆட்சி அதிகாரத்தை அடுத்து, பொலிஸார் சுயாதீனமான முறையில் செயற்படுகின்றனர் .
கடந்த அரசாங்கத்தில் வைத்தியர் சாபியின் வழக்கு விசாரணைகள் பக்கச்சார்பான முறையில் இடம் பெற்றன. அரசியல் தலையீடுகள் காணப்பட்டன.
இந் நிலையில் புதிய அரசாங்கத்தில் குறித்த வழக்கு விசாரணைகள் பக்கச்சார்பின்றி முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் இதன்போது கூறினார்.
Need sonnal nangal nambanum pola. Mittal sami
ReplyDelete