Dr ஷாபி இன்று, நீதிமன்றத்தில் ஆஜரானார்
குருணாகலை வைத்தியசாலை வைத்தியர் ஷாபி ஷிஹாப்தீனுக்கு எதிரான வழக்கிற்காக அவர் குருணாகலை நீதவான் நீதிமன்றில் தற்போது ஆஜராகியுள்ளார்.
அசாதாரண முறையில் சொத்து சேகரித்தமை, தீவரவாதத்திற்கு உதவியமை மற்றும் கருத்தடை சத்திர சிகிச்சை மேற்கொண்டமை போன்ற குற்றச்சாட்டு தொடர்பில் வைத்தியருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
வைத்தியர் ஷாபி ஷிஹாப்தீன் ஆகஸ்ட் 9 ஆம் திகதி குறித்த வழக்கு தொடர்பில் இறுதியாக நீதிமன்றத்தில் ஆஜராகி இருந்தார்.
அன்று வழக்கு விசாரணை ஆரம்பிக்கப்பட்ட போது குற்றப் புலனாய்வு திணைக்களத்தினரால் குறித்த வழக்கு தொடர்பான 12 பக்க அறிக்கை ஒன்று நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட்டிருந்தது.
குறித்த அறிக்கை வைத்தியர் தொடர்பில் மேற்கொண்ட விசாரணைகள் தொடர்பில் நீதிமன்றத்திற்கு விளக்கமளிக்கப்பட்டது.
பின்னர் வாதிகள் மற்றும் பிரதிவாதிகள் நீதிமன்றத்தில் தங்களது கருத்துக்களை பதிவு செய்திருந்தனர்.
குறித்த கருத்துக்களை கவனத்திற் கொண்ட நீதவான், குறித்த வழக்கை இன்று (டிசம்பர் 12) வரை ஒத்திவைத்தமை குறிப்பிடத்தக்கது.
அல்லாஹ் தான் இந்த சகோதரை தீய ஷைத்தானின் சதியில் இருந்து பாதுகாக்க வேண்டும்.ஆரம்பத்தில் துவேஷக்காரர்களினால் இவருக்கு எதிராக கருத்தடை சத்திரசிகிச்சை செய்த குற்றம் சாட்டியுள்ளார்கள் அதன் பின்னர் சொத்து சேகரிப்பு குற்றம்,இங்கு கருத்தடைக்கும் சொத்து சேகரிப்புக்கும் என்னப்பா சம்பந்தம் இருக்கு??
ReplyDeleteஇனிமேல் இலங்கையில் முஸ்லிம்கள் எல்லோரும் ஒன்று சேரவேண்டும் ஏனேனில் துவேஷக்காரர்களின் குரோதங்கள் நாளுக்கு நாள் கூடி கொண்டே செல்கின்றது முஸ்லிம்கள் ஒன்றுபட்டால் தான் அவை அணைத்து சாதிகளும் முறியடிக்கலாம்.
Let the true prevail... Surely falsehood is bound to perish....
ReplyDelete