Header Ads



முஸ்லிம் சட்டத்தில் திருத்தம் அவசியம், Dr சாபிக்கு எதிராக நடவடிக்கை தேவை

முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்­டத்தில் திருத்­தங்கள் செய்­ய­வேண்­டி­யது அவ­சி­ய­மா­ன­தாகும். அத்­துடன், கண்­டிய விவாக ரத்துச் சட்டம் மற்றும் பொது விவாக சட்­டத்தில் திருத்தம் மேற்­கொள்ள வேண்டும் என பாரா­ளு­மன்ற உறுப்­பினர் அத்து­ர­லிய ரதன தேரர் தெரி­வித்­துள்ளார்.இரா­ஜ­கி­ரி­யவில் அமைந்­துள்ள சதனம் செவ­னவில்  இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்­பின்­போது இதனை தெரி­வித்த அவர் மேலும் கூறி­ய­தா­வது,

ஜனா­தி­பதி தேர்­தலின் போது வடக்கு, கிழக்கு மாகா­ணங்­களை சேர்ந்த தமிழ், முஸ்லிம் மக்­களின் 5சத­வீத வாக்­கு­களே ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜபக் ஷவிற்கு கிடைக்­கப்­பெற்­றி­ருந்­தது. இருப்­பினும் சிங்­கள மக்­களின் வாக்­குகள் அதி­க­ளவில் கோத்தா­பய ராஜ­ப­க் ஷ­விற்கு கிடைக்­கப்­பெற்­றி­ருந்­தது. விசே­ட­மான முறையில் ஏரா­ள­மான தேரர்­களும் இந்த தேர்­த­லின்­போது தமது பங்­க­ளிப்பை நாட்­டிற்­காக வழங்­கி­யி­ருந்­தனர். அது மாத்­தி­ர­மல்­லாது வெளி­நா­டு­க­ளி­லி­ருந்தும் ஏரா­ள­மான சிங்­கள மக்கள் நாட்­டிற்கு வருகை தந்­த­துடன், இந்த தேர்­தலின் போது தமது பங்­க­ளிப்­பினை முழு­மை­யாக வழங்­கி­யி­ருந்­தனர்.

உயிர்த்த ஞாயிறு குண்­டுத்­தாக்­கு­தல்­களின் பின்னர் பல்­வேறு பிரச்­சி­னைகள் எழுந்­தன. அது தொடர்பில் ஆராய்ந்து உரிய நட­வ­டிக்கை எடுக்­கு­மாறு உண்­ணா­வி­ரதப் போராட்­டத்தை மேற்­கொண்­டி­ருந்தோம். இந்­நி­லையில், குண்டுத் தாக்­கு­தல்­க­ளுடன் தொடர்­பு­டைய குற்­ற­வா­ளி­களை நாட்டு மக்­க­ளுக்கு வெளிப்­ப­டுத்த வேண்­டி­யது அவ­சி­ய­மா­ன­தாகும். அந்த விடயம் தொடர்­பிலும் சிந்­தித்தே சிங்­கள பௌத்த மக்கள் இந்த முடி­வுக்கு வந்­துள்­ளனர்.

தமிழ் மக்கள் சிலரும் இதன்­போது கோத்­தா­பய ராஜபக் ஷவிற்கு வாக்­க­ளித்து தமது பங்­க­ளிப்பை வெளிப்­ப­டுத்­தி­யுள்­ளனர். அவர்­க­ளுக்கும் எமது நன்­றி­களை தெரி­வித்­துக்­கொள்­கின்றோம்.

தமிழ் அர­சியல் தலை­வர்கள் சிங்­க­ள­வர்­களின் வாக்­கு­களால் மாத்­திரம் ஜனா­தி­ப­தியை தெரிவு செய்­ய­மு­டி­யாது என கூறினர். ஆயினும் அந்த கருத்து பொய்­யா­னது என்­ப­தனை நாம் இந்த தேர்தல் வெற்­றியின் ஊடாக உறு­திப்­ப­டுத்­தி­யுள்ளோம்.

கருத்­தடை விவ­காரம் தொடர்பில் குரு­நாகல் போதனா வைத்­தி­ய­சா­லையின் வைத்­தி­ய­ருக்கு எதி­ராக தொட­ரப்­பட்ட வழக்கின் விசா­ர­ணை­களை திசார, நிஷாந்த சில்வா மற்றும் ஷானி அபே­சே­கர ஆகியோர் முறை­யாக மேற்­கொள்­ள­வில்லை. ஆகவே இந்த விசா­ர­ணைகள் கட்சி பேத­மின்றி உரிய விதத்தில் மேற்­கொள்­ளப்­ப­ட­வேண்­டி­யது அவ­சி­ய­மா­ன­தாகும். இது­தொ­டர்பில் நாம் பொலிஸ் ஆணைக்­கு­ழுவில் முறைப்­பா­ட­ளித்­தி­ருந்தோம். ஆயினும் அந்த வழக்கு விசா­ர­ணைகள் உரிய முறையில் இடம்­பெ­ற­வில்லை என்றே கூற­மு­டியும். இந்த அர­சாங்கம் அது­தொ­டர்பில் தகுந்த நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­ளு­மென நம்­பு­கின்றோம்.

மட்­டக்­க­ளப்பு பல்­க­லைக்­க­ழகம் தொடர்­பான விட­யங்­க­ளிலும் உரிய விசா­ர­ணை­களை மேற்­கொள்­ளு­மாறு முறை­யிட்­டி­ருந்தோம். ஆயினும், கடந்த அர­சாங்­கத்தில் முறை­யான விசா­ர­ணைகள் இடம்­பெற்­றி­ருக்­க­வில்லை. ஆகவே, இது தொடர்பில் விசேட ஆணைக்­குழு நிறு­வப்­பட்டு விசா­ர­ணைகள் நடத்­தப்­ப­டு­மென நம்­பு­கின்றோம். அத்­துடன், தேசிய ரீதியில் சமா­தா­னத்தை கட்­டி­யெ­ழுப்ப வேண்­டி­யது அவ­சி­ய­மா­ன­தாகும்

1907 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க விவாக பொது கட்­ட­ளைச்­சட்டம், 1951ஆம் ஆண்டின் 13ஆம் இலக்க முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டம் மற்றும் 1952 ஆம் ஆண்டின் 44ஆம் இலக்க கண்­டிய விவாக நீக்­க­சட்டம் ஆகி­ய­வற்றில் திருத்­தங்­களை மேற்­கொள்ள வேண்­டி­யது அவ­சி­ய­மா­ன­தாகும். அத்­துடன், நாட்­டிற்குப் பொது­வா­ன­தொரு சட்டம் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­ப­ட­வேண்டும் .

தேர்தல் முறைமை மீள்­ப­ரி­சீ­ல­னைக்கு உட்­ப­டுத்­தப்­பட வேண்டும். நிலையான அபிவிருத்தி மற்றும் சர்வதேச நாடுகளுக்கு அடிபணியாத உறுதியான தன்மை என்பவை தொடர்பில் கோத்தாபய ராஜபக் ஷ கவனம் செலுத்தியிருந்ததுடன், அனைத்து துறைசார் அபிவிருத்தி தொடர்பிலும் சிறந்த கொள்கைகளை முன்வைத்திருந்தார். அந்த வகையில் அனைத்து துறைகளிலும் மாற்றம் ஏற்படவேண்டியது அவசியமானதாகும். ஆகவேதான் நாம் அவருக்கு எமது ஆதரவை வழங்கியிருந்தோம்.-Vidivelli

11 comments:

  1. ahhaa Fallopian ratane

    ReplyDelete
  2. தனிச்சட்டங்கள் இருக்கக்கூடாது எனும் போது கண்டியச்சட்டத்தையும் அதே போன்று யாழ்பாணச்சட்டத்தையும் சேர்த்துப்பேசுவது முன்னேற்றகரமான சிந்தனையாகும்.அதே போன்று முகம் மூடுவது பற்றிக்கூறும் போது அறை குறை ஆடை அணிவதையும் தடை செய்யச் சட்டம் கொண்டு வர வேண்டும் என்று கூறியிருநதால் இனவாதி என்ற பெயர் வந்திருக்காது.

    ReplyDelete
  3. Ohhh... again mad fallopian in action ...

    ReplyDelete
  4. அதுமட்டுமன்றி இலங்கையில் பெண்கள் அணியும் அரைகுறை ஆ​டைகளைப் போல் கிறிஸ்தவ கன்னியர்களும் அணியுமாறு சட்டம் கொண்டுவர வேண்டும். அப்போது தான் இலங்கையர் அனைவருக்கும் ஒரு சட்டமாக இருக்கும்.மேலும், ஆங்கிலம் தெரியாத அனைவரும் தேசிய உடையையும் ஆங்கிலம் தெரிந்தவர்கள் மாத்திரம் கால்சட்டைகள் அணியலாம் என்ற சட்டத்தையும் கொண்டுவரப்பட வேண்டும்.

    ReplyDelete
  5. @Ajan
    Are you a lunatic?
    Why do you say ‘good’?
    What do yo mean by it?
    Are you born to more than one paternal origins?
    Behave and conduct like a human being and not a racial animal
    These are sensitive issues and don’t try to poke your ass-hole into everything.

    ReplyDelete
  6. Ajan எப்பவும் முஸ்லிம்களுக்கு எதிரான கருத்துக்களை ஆதறிப்பவர். அதனால் நீங்கள் உங்கள் கருத்துக்களை BAD என்றும் பதிவிடலாம்

    ReplyDelete
  7. Not good very very good

    ReplyDelete
  8. இந்த நாட்டில் வாழும் அனைத்து தமிழ் சமூகமும், முஸ்லிம்களும் சேர்ந்து இந்த நாட்டு சிறுபான்மையினரை அவமதிக்கும் இந்த ரத்னாவுக்கு ஆயுள்கால சிறைத்தண்டனை வழங்குமாறு அரசை வலியுறுத்து கோரிக்கை நிறைவேற்றப்படும் வரை ஆர்ப்பாட்டம் செய்ய வேண்டும்.இவன் போன்ற துரோகிகளை நாட்டைவிட்டும் துரட்சி பண்ணப்படவேண்டும்.

    ReplyDelete

Powered by Blogger.