பொய் சாட்சியம் வழங்கிய சுவிஸ், தூதரக ஊழியரை கைதுசெய்ய CID க்கு சட்டமா அதிபர் ஆலோசனை
கொழும்பில் கடத்தப்பட்டு, அச்சுறுத்தப்பட்டதாக கூறப்படும் சுவிட்சர்லாந்து தூதர பெண் ஊழியரை கைதுசெய்யுமாறு சி.ஐ.டி. என்ற குற்றப் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளருக்கு சட்டமா அதிபர் ஆலோசனை வழங்கியுள்ளார்.
பொய் சாட்சியம் வழங்கியமை தொடர்பான மேலதிக விசாரணைகளுக்காக அவரைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு சட்டமா அதிபர் அறிவுறுத்தியுள்ளதாக ஜனாதிபதியின் மேலதிக செயலாளரும் சட்டமா அதிபரின் இணைப்பதிகாரியுமான அரச சிரேஷ்ட சட்டத்தரணி நிஷாரா ஜயரத்ன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment