Header Ads



சுவிஸ் தூதரக பணியாளர், கடத்தலுக்கு ஆதாரம் இல்லை – CID நீதிமன்றத்தில் தெரிவிப்பு

சுவிஸ் தூதரக பெண் பணியாளர் கார்னியர் பனிஸ்டர்  பிரான்சிஸ் கடத்தப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டுக்கு எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை என்று கொழும்பு பிரதம நீதிவான் லங்கா ஜயரத்னவிடம், குற்ற விசாரணைப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

நேற்று கொழும்பு பிரதம நீதிவானிடம் அறிக்கை ஒன்றை தாக்கல் செய்துள்ள குற்ற விசாரணைப் பிரிவினர்,

சென்.பிரிஜெட் கொன்வென்ட் அருகிலேயே இந்தக் கடத்தல் இடம்பெற்றதாக சுவிஸ் தூதரக அதிகாரிகளிடம் கார்னியர் பனிஸ்டர்  பிரான்சிஸ் கூறியிருந்தாலும், அவர் குற்ற விசாரணைப் பிரிவில் அளித்த வாக்குமூலத்தில் இருந்து, அத்தகைய சம்பவம் எதுவும், அந்த இடத்தில் நடக்கவில்லை என்று தெரியவந்துள்ளது .

கடந்த 8 மற்றும் 9ஆம் நாள்களில் குற்ற விசாரணைத் திணைக்களத்தில் அவர் அளித்த வாக்குமூலத்தில், கொள்ளுப்பிட்டி பல்மேரா கோர்ட் அடுக்குமாடி  அருகிலேயே சம்பவம் இடம்பெற்றதாக தெரிவித்துள்ளார்.

குற்ற விசாரணைத் திணைக்களம் இதுவரை நடத்திய விசாரணையின் படி, அவர் கூறியபடி இலக்கம் 20,2 / 2, பல்மேரா கோர்ட், பல்மேரா அவென்யூ, கொழும்பு- 03 இல், எந்தவொரு சம்பவமும் இடம்பெற்றதற்கான எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை.

அவரிடம் மேலும் வாக்குமூலம் பதிவு செய்யப்பட வேண்டும். ஏனெனில் முழுமையாக விசாரிக்கப்பட வேண்டும்.

டிசம்பர் 8 ம் நாள் அவரது முழு வாக்குமூலத்தையும் பதிவு செய்ய முடியவில்லை. அவர் தனது வாக்குமூலம் அளிக்கும் போது இரண்டு முறை மயக்கம் அடைந்தார்.

இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் இன்னும் நடந்து கொண்டிருக்கின்றன. அவரது வாக்குமூலம் இன்னமும் முழுமையாகப்  பதிவு செய்யப்படவில்லை.

அவர் வாக்குமூலம் அளிக்கும் போது, தூதரக மருத்துவர் மற்றும் தூதரக அதிகாரிகள் அவருக்கு மிக அருகில் இருந்தனர்.

அத்துடன், அவரது தொலைபேசி விபரத்தில் இருந்த இரண்டு பேரிடமும் விசாரணைகள் நடத்தப்பட்டு வாக்குமூலம் பதிவு செய்யப்பட வேண்டும். அவர்களில் ஒருவர் தூதரக அதிகாரி” என்றும் தெரிவித்துள்ளனர்.

3 comments:

  1. CID want to protect Rajapakse regime.

    ReplyDelete
  2. ABDUL, BETTER TO BE CAREFULL
    WHEN U MAKE COMMENTS LIKE
    THIS, WHICH IS NOT TRUE &
    CANNOT BE PROVED,
    THIS IS COMMUNAL COMMENT.

    ReplyDelete
  3. @imthiyas: The incidence was trully happend after DIG Policemen was seek asylum in Swiss because of Gothabaya groups try ask the treating Swiss officer.

    ReplyDelete

Powered by Blogger.