உலக அழகிக்கு, ஜனாதிபதி கோட்டாபய வாழ்த்து
திருமணமானவர்களுக்கான உலக அழகு ராணி போட்டியில் இலங்கையை சேர்ந்த பெண் அழகு ராணியாக முடி சூட்டப்பட்டுள்ள நிலையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச வாழ்த்து தெரிவித்துள்ளார்.
கொழும்பைச் சேர்ந்த கரோலினி என்பவரே திருமணமானவர்களுக்கான உலக அழகு ராணி போட்டியில் வெற்றிபெற்றுள்ளார்.
அமெரிக்காவின் லாஸ் வேகாஸில் நடைபெற்ற உலக ராணி 2020 போட்டியிலேயே அவர் இந்த பட்டத்தை வென்றுள்ளார். 35 வருடங்களின் பின்னர் இலங்கையை சேர்ந்த ஒரு இந்த பட்டத்தை வென்ற முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.
இந்நிலையில், குறித்த பெண்ணுக்கு ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ச வாழ்த்து கூறியுள்ளார். இது குறித்து பேஸ்புக் பக்கத்தில் பதிவொன்றை இட்டுள்ள அவர் வாழ்த்து கூறியுள்ளார்.
அந்த பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, "MRS WORLD 2020" என முடிசூட்டப்பட்ட திருமதி. கரோலின் ஜூரி அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
35 வருடங்களின் பின் நமது நாட்டிற்கு சர்வதேச பட்டத்தை மீண்டும் கொண்டுவந்து இலங்கையர்கள் அனைவரையும் பெருமைப்பட வைத்த உங்களுக்கு எனது நன்றிகள்.” என குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment