Header Ads



குளிர்காலத்தில் சுற்றுலா மேற்கொள்ள உலகின் சிறந்த நாடுகள் பட்டியலில் இலங்கை முதலிடம்


எதிர்வரும் குளிர்காலத்தின் போது சுற்றுலாப்பிரயாணம் மேற்கொள்ளக்கூடிய உலகின் சிறந்த வெப்பமான 20 நாடுகள் பட்டியலில் இலங்கை முதலாம் இடத்தை பிடித்துள்ளது.

யூ.எஸ்.ஏ டு டே இணையத்தளம் இதனை தெரிவித்துள்ளது.

இந்த பட்டியலில் அவுஸ்திரேலியா, நியுஸிலாந்து, தாய்லாந்து, பிரேசில், மெக்ஸிக்கோ, இந்தேனேசியா, ஐக்கிய அரபு இராச்சியம், வியட்னாம், தென்னாப்பிரிக்கா, உள்ளிட்ட 19 நாடுகளை பின்தள்ளி இலங்கை முதலிடத்தை பெற்றுள்ளது.

டிசம்பர் மற்றும் பெப்ரவரி காலப்பகுதியில் ஐரோப்பா உள்ளிட்ட நாடுகளில் நிலவும் கடும் பனியுடனான காலநிலையின் போது அதிக வெப்பத்துடனான நாடுகளை நோக்கி சுற்றுலாப்பிரயாணிகள் பயணிக்கின்றனர்.

அந்தவகையில், இந்து சமூத்திரத்தி;ன் அமைந்துள்ள அழகிய நாடாக இலங்கை அடையாளப்படுத்தியுள்ள யு.எஸ்.ஏ டுடே இணையத்தளம் வரலாற்று சிறப்புமிக்க மற்றும் சுற்றுலா ரீதியாக பல கவர்ச்சிகரமான இடங்கள் இலங்கையில் அமையப்பெற்றுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

No comments

Powered by Blogger.