மல்கம் ரஞ்சித்துடன், பாதுகாப்பு செயலாளர் சந்திப்பு
பாதுகாப்பு செயலாளர் கமல் குணரட்ன இன்று -04- கர்தினால் மல்கம் ரஞ்சித்தை சந்தித்து கலந்துரையாடினார்.
கொழும்பில் உள்ள ஆயர்கள் சபையில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. பல்வேறு பிரச்சனைகள் குறித்து இருவரும் கலந்துரையாடலை நடத்தியதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
ஏற்கனவே உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் அமைக்கப்படவுள்ள விசாரணைக்குழுவில் கர்தினாலின் பிரதிநிதி ஒருவரும் உள்ளடங்கவேண்டும் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச விருப்பம் வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment