Header Ads



எதிர்கட்சி தலைவராக சஜித் செயற்பட்டால், அவரே பிரதமர் வேட்பாளராகுவார் - ரணிலின் சகா தெரிவிப்பு

எதிர்கட்சி தலைவராக சஜித் பிரேமதாச நாடாளுமன்றில் செயற்படுவாராயின் அவரே எதிர்வரும் பொதுத் தேர்தலில் பிரதமர் வேட்பாளராகுவார் என நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்த்தன ( ரணிலின் சகா) தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகமான ஸ்ரீ கொத்தாவில் இன்று -11-இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அதற்காக ஐக்கிய தேசிய முன்னணியில் அங்கம் வகிக்கும் சகல கட்சிகளினதும் இணக்கம் எட்டப்படுமாயின் நாடாளுமன்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றுக் கொள்ள முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இந்த செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் கவிந்த ஜயவர்த்தன, ஐக்கிய தேசிய கட்சியில்; நிச்சயமாக மாற்றங்கள் ஏற்படுத்தப்படும் என குறிப்பிட்டுள்ளார்..

அத்துடன் புதிய திட்டங்களுடனான செயற்பாடுகளும் முன்னெடுக்கப்படும்.

இதன்போது, கட்சியின் தலைமைத்துவ மாற்றம் உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து அவதானம் செலுத்தப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் கவிந்த ஜயவர்த்தன தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.