ஆசிய பசுபிக் விவசாய கூட்டுறவு அபிவிருத்தி வலய செயலமர்வினை வெற்றிகரமாக நடத்திய றியாஸ்
தாய்லாந்தினை தலைமையகமாக கொண்டு இயங்கும் ஆசிய பசுபிக் விவசாய கூட்டுறவு அபிவிருத்தி வலையத்தின் நிறைவேற்றுக் குழுவின் செலமர்வினை இலங்கையில் வெற்றி கரமாக நடத்தியமைக்கு தமது அமைப்பு முழுமையான நன்றியினை இலங்கை இளைஞர் வலுவூட்டல் கூட்டுறவு சங்கத்தின் தலைவைருக்கும்,இதனது ஏற்பாட்டு குழுவுக்கும் நன்றியனை தெரிவிப்பதாக மேற்படி வலையத்தின் தலைவர் சன்தீப் குமார் நாயக் தெரிவித்தார்.
நேற்று இளைஞர் வலுவூட்டல் கூட்டுறவு சங்கத்தின் தலைவர் எஸ்.எம்.றியாஸின் கொழும்பில் அமைந்துள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்த போதே மேற்கண்டவாறு அவர் கூறினார்.
மேற்படி வலையமைப்பில் புதிதாக இலங்கை தமது அங்கத்துவத்தை பெற்றுக் கொண்ட போது,பிராந்தியத்தின் விவசாய மற்றும் கூட்டுறவு முன்னேற்த்திற்கான பெறுமதியான பரிந்துரைகளை செய்துள்ளமையானது இலங்கை தொடர்பிலான திறந்த கூட்டுறவு செயற்பாடுகளின் வெளிப்படைத்தன்மையினை அறிந்து கொள்ள முடிந்தாகவும் இதன் கேபாது சந்திப் குமார் நாயக் தெரிவித்தார்.
இம்மாதம் 12 -13 ஆம் திகதிகளில் கொழும்பில் இடம் பெற்ற வலையமைப்பின் ஆரம்ப நிகழ்வு முதல் இறுதி வரைக்குமான ஏற்பாடுகள் மிகவும் பாராட்டுக்குரியது என்றும் செயற்குழு எடுத்துள்ள தீர்மானத்தினை இலங்கை அரசாங்கத்திற்கு சமர்ப்பிப்பது தொடர்பிலும் முஹம்மத் றியாஸிடம் ,சந்திப் குமார் நாயக் எடுத்துரைத்தார்.ஆதே வேளை இலங்கை – இந்தியாவுடன் கொண்டிருக்கும் வர்த்தக துறையுடனான தொடர்பு வலுப்பெறுவதற்கு இந்த வலையமப்பின் பங்களிப்பு மிகவும் அவசியம் என்று ஆசிய பசுபிக் விவசாய கூட்டுறவு அபிவிருத்தி வலையமைப்பின் தலைவரிடத்தில் எடுத்துரைத்த முஹம்மத் றியாஸ் இலங்கையின் இளைஞர்களின் பல் துறை சார்ந்த முன்னேற்றத்திற்கு மேற்படி வலையமைப்பு களம் அமைத்து கொடுப்பது தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும் அவர் இதன் போது கேட்டுக் கொண்டார்.
இது தொடர்பில் அடுத்து இடம் பெறும் செஙயற் குழு கூட்ட நிகழ்ச்சி நிரலுக்குள் சேர்த்துக் கொள்வது தொடர்பில் கலந்துரையாடல்களை நடத்த வுள்ளதாகவும்,வலையமைப்பின் பிரதி தலைவரான முஹம்மத் றியாஸ் இலங்கையினை சேர்ந்தவராக இருக்கின்றமை மேலும் தமது அமைப்புக்கு பலம் என்றும் இதன் போது ஆசிய பசுபிக் விவசாய கூட்டுறவு அபிவிருத்தி வலையமைப்பின் தலைவர் சந்திப் குமார் நாயக் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக இலங்கை கூட்டுறவு அபிவிருத்தி திணைக்களம் உள்ளிட்ட அதனது கீழ் செயற்படும் அமைப்புக்களின் பங்களிப்பினை முஹம்மத் றியாஸ் பெற்றுக் கொடுத்தமை பாராட்டுக்குரியது என்றும் அவர் இதன் போது கூறினார்.
Post a Comment