அரிசியின் விலை அதிகரிப்பு
சந்தைகளில் அரிசியின் விலை சற்று அதிகரித்துள்ளதாக நுகர்வோர் குறிப்பிட்டுள்ளனர்.
பெரும்பாலான அரிசி வகைகள் 100 ரூபா முதல் 150 ரூபா வரை விற்பனை செய்யப்படுவதாக நுகர்வோர் தெரிவித்துள்ளனர்.
இந்த விடயம் தொடர்பில் உள்ளக வர்த்தகம் மற்றும் பாவனையாளர் நலன்புரி இராஜாங்க அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பாவிடம் வினவினோம்.
சந்தைகளில் அரிசியின் விலை அதிகரித்துள்ளமை குறித்து தமக்கு தகவல் கிடைத்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
அரசிடமுள்ள 40,000 மெட்ரிக் தொன் நெல்லை அரிசியாக்குவதற்கு உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இவை எதிர்வரும் வாரத்தில் லக் சதொச ஊடாக சந்தைக்கு விநியோகிக்கப்படவுள்ளன.
எவ்வாறாயினும், அரிசியை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் இதுவரை தீர்மானிக்கவில்லை எனவும் வர்த்தகம் மற்றும் பாவனையாளர் நலன்புரி இராஜாங்க அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா மேலும் கூறினார்.
Post a Comment