பௌத்த பிக்குகளும், மகா சங்கரத்தினருமே எமக்கு பக்கபலாமாக இருந்தார்கள்
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் உறுதிமொழிக்கமைவாக நாட்டின் பொருளாதாரத்தை பலப்படுத்தும் இலகுவான வரிமுறையொன்றை அறிமுகஞ் செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் வீதி பெருந்தெருக்கள் அபிவிருத்தி அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னான்டோ தெரிவித்துள்ளார்.
குருநாகலையில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் இக்கருத்தை வெளியிட்டுள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தேர்தல்கள் விஞ்ஞாபனத்தை வெளியிடும் போது இந்நாட்டை செயற்படும் நாடாக மாற்றியமைப்பதாக உறுதிமொழி வழங்கியுள்ளார். செயற்படும் நாடாக மாற்றியமைக்கும் பொருட்டே நாம் முன்னின்று செயற்படுகின்றோம்.
பொருளாதாரத்தை பலப்படுத்துவோம். வரிகளை குறைத்துள்ளோம். வரிகளை குறைத்த பின்னர் வருமானத்தை எப்படி ஈட்டுகின்றீர்கள் என வினவுகின்றார்கள். அவர்கள் ஆட்சிக்கு வந்தவுடன் அரச வருமானத்தை நூறு வீதத்தால் அதிகரித்தாக குறிப்பிட்டார்கள். அதாவது ரணில் விக்கிரமசிங்கவின் பையிலிருந்து பணத்தை இடுவதைப் போல் காட்டிக்கொண்டார்கள்.
அரசாங்க வருமானத்தை நூறு வீதத்தால் அதிகரிக்கும் பொருட்டு இந்நாட்டு மக்களின் பைகளிலிருந்தே பணத்தை பெற்றுக்கொண்டார்கள்.
அவர்கள் ஏன் அரசாங்க நிறுவனங்களை நூறு வீதத்தால் அதிகரித்தார்கள. மக்களிற்குச் சொந்தமான மத்திய வங்கியிலிருந்த மூன்று மாத காலத்திற்குள் கொள்ளையிட்ட பணத்தையும் இந்நாட்டு மக்களே மீள் செலுத்த நேரிட்டது.
அதன் காரணமாகவே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அவர்கள் முதல் பத்து நாட்களிற்குள் இலகுவான வரிமுறையொன்றை அறிமுகஞ் செய்து இந்நாட்டு பொருளாதார நிலையில் மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் ஆறு மாதங்களிற்கு முன்னரே உரிய தீர்மானங்களை மேற்கொண்டுள்ளார்.
எங்களுடைய முதன்மை பௌத்த பிக்கு மற்றும் மகா சங்கரத்தினருக்கு என்னுடைய முதற்கண் நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன். கடந்த தேர்தலில் நீங்கள் தான் எமக்கு மாபெரும் பக்கபலாமாக இருந்தீர்கள். நீங்கள் தொடர்ச்சியான தாக்குதல்களிற்கு முகங்கொடுக்கும் வேளையில் பாதையில் இறங்கி போராடியமையாலே இந்நாட்டு மக்கள் எமக்கு முழுமையான ஆதரவை வழங்கி எமக்கு மாபெரும் வெற்றியை ஈட்டி தந்தார்கள்.
இச்செயற்பாட்டின் பொருட்டு நான் நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன். இவ்வரசாங்கம் ஒரு போதும் உங்களுக்கு எதிராக செயற்படாது. நாம் எம்முடைய கடமைகளை உரிய முறையில் நிறைவேற்றுவோம் என்பதை நான் இச்சந்தர்பத்தில் கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.
இது ஒரு சாதாரணமான போராட்டமல்ல. மிகவும் கடினமான போராட்டம். இவ்வெற்றியையும் போராட்டத்தையும் ஒருபோதும் மறக்காதீர்கள்.
இப்போராட்டம் இன்னும் நிறைவடையவில்லை. இரு வாரங்களுள் சுவிஸ் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட முறையை நீங்கள் கண்டீர்கள்.
சிறைச்சாலைகளில் இருக்கவேண்டியவர்கள் மக்கள் அதிகாரத்திற்கு கொண்டுவந்த ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்திற்கு களங்கம் ஏற்படும் வகையில் செயற்பட்டதை கண்டீர்கள். அதனால் தான் இப்போராட்டம் நிறைவடையவில்லை என நான் கூறினேன். அதனை ஒரு போதும் மறக்காதீர்கள்,என மேலும் குறிப்பிட்டுள்ளார்.
Supply more liqueur they(Most of Sinhalese) all will support you...
ReplyDelete