Header Ads



விசா நிறுத்தப்படவில்லை - வதந்திகளை அடியோடு மறுக்கிறது சுவிஸ்

இலங்கைக்கான  சுவிஸ் தூதரகம் விசா விண்ணப்பங்களை பரிசீலிக்கும்  நடவடிக்கைகளை நிறுத்தியுள்ளது என வெளியாகியுள்ள தகவல்களை சுவிட்சர்லாந்தின் வெளிவிவகார சமஸ்டி திணைக்களம் நிராகரித்துள்ளது.

டுவிட்டரில்  இதனை பதிவு செய்துள்ள வெளிவிவகார சமஸ்டி திணைக்களம் விசா விண்ணப்பங்கள் சட்ட ரீதியிலான காலக்கெடுவிற்குள் பரிசீலிக்கப்படுகின்றன,இது தொடர்பான ஏனைய நடவடிக்கைகளும் சுவிஸ் அதிகாரிகள் உருவாக்கியுள்ள வழமையான நடைமுறைஊடாக முன்னெடுக்கப்படுகின்ற என தெரிவித்துள்ளது.

சுவிஸ் தூதரக பணியாளர் கடத்தப்பட்ட விவகாரத்தை தொடர்ந்து  விசா வழங்கும் நடைமுறையை தூதரகம் நிறுத்தியுள்ளது என வதந்திகள் வெளியாகியுள்ளமைகுறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.