எதிர்க்கட்சித்தலைவர் யாரென்பதை கட்சியின், பாராளுமன்ற உறுப்பினர்களே கூடி தீர்மானிப்பர்
எதிர்க்கட்சித்தலைவர் யார் என்பதை ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்களும், பாராளுமன்றக்குழுவும் கூடியே தீர்மானிக்கவுள்ளதாக அக்கட்சியின் பொதுச்செயலாளரும் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
சஜித் பிரேமதாஸவுக்கு வழங்க வேண்டும் என்று ஒரு தரப்பினர் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் பங்காளிக்கட்சிகளின் தலைவர்களுடன் ரணில் விக்கிரமசிங்க பேச்சுக்களை நடத்தியுள்ளதோடு இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
எவ்வாறாயினும், பாராளுமன்றத்தில் எதிர்த்தரப்பில் பெரும்பான்மையான ஆசனங்களைக் கொண்ட ஐ.தே.கவின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கே பாராளுமன்ற சம்பிரதாயங்களுக்கு அமைவாக எதிர்க்கட்சித்தலைவர் பதவி வழங்கப்படும் என்று சபாநாயகர் கரு ஜயசூரியவும் அறிவித்துள்ளார்.
இவ்வாறான நிலையில் கட்சியின் பொதுச்செயலாளரிடத்தில் வினவியபோது, ஐக்கிய தேசியக் கட்சியினுள் ஒரு தரப்பினர் எதிர்க்கட்சித்தலைவராக சஜித் பிரேமதாஸவை நியமிக்க கோருகின்றார்கள். மேலும் ஒருசிலர் கட்சித்தலைவர் பதவியை மாற்ற வேண்டும் என்கின்றார்கள்.
எமது கட்சியானது ஜனநாயகப் பண்புகள் நிறைந்ததொரு கட்சியாகும். ஆகவே கலந்துரையாடல்கள் ஊடாக இந்தப்பிரச்சினைக்கு தீர்வினை எட்டமுடியும். அதற்காக பலதரப்பட்ட கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருகின்றன.
எவ்வாறாயினும் நாளை அல்லது நாளை மறுதினம் ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்களுக்கிடையிலான முக்கிய கலந்துரையாடலொன்றும், பாராளுமன்றக் குழு கலந்துரையாடலும் நடைபெறும். அதன் பின்னரே எதிர்க்கட்சித்தலைவர் யார் என்பது தீர்மானிக்கப்படும் என்றார்.
Its very good. Take all of your own time and decide about the opposition leadership position, its not very URGENT. Keep cool & calm and take your decision.
ReplyDeleteThis beautiful island need a good leadership to make it as center of Asia. The country has already got that leader ship and he is already started many things to convert this country to compete with Japan and Singapore.
You guys pls take your time and ....
1. Finish your problems within your party to select who is the party leader.
2. Then select who is going to work as opposition leader.( you all will finalize this on the day parliament will be desolved)
3. Try to make unity within your party.
All these are your party's internal issues and try to solve it first.
Dont think about the country... when you can't manage your party , how can you think about the cohntry.