இந்தியாவிடமும், சீனாவிடமும் ஜனாதிபதி கோத்தாபய விடுத்துள்ள முக்கிய வேண்டுகோள்
இலங்கை இறைமையுள்ள நாடு என்பதனை இந்தியாவும் சீனாவும் மதிக்கவேண்டும் என ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச வேண்டுகோள் விடுத்துள்ளார்.
டுவிட்டரில் அவர் இந்த கருத்தினை பதிவு செய்துள்ளார்.
சர்வதேச வல்லரசுகளான இந்தியாவையும் சீனாவையும் எங்கள் மீது நம்பிக்கைவைத்து எங்கள் எதிர்காலம் மீது முதலீடு செய்யுமாறு வேண்டுகோள்விடுக்கின்றேன், என டுவிட்டரில் பதிவு செய்துள்ள கோத்தாபய ராஜபக்ச இறைமையுள்ள நாடு என்ற எங்கள் தனித்துவமான அடையாளத்தை மதிக்குமாறும் கேட்டுக்கொள்கின்றேன் என தெரிவித்துள்ளார்.
இந்தியாவிற்கான தனது விஜயத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பிய ஒரிரு நாட்களில் இலங்கை ஜனாதிபதி தனது இந்த கருத்தினை பதிவு செய்துள்ளார்.
Post a Comment