இலங்கையை முதலிடத்திற்கு கொண்டுவந்து, சாதனை படைக்கச்செய்த அமெரிக்கர்கள்
உலகளாவிய ரீதியில் கூகிள் தேடுபொறியின் ஊடாக அதிகம் தேடப்பட்ட நாடாக இலங்கை பெயரிடப்பட்டுள்ளது.
2019ஆம் ஆண்டிற்கான கூகிள் தேடுதல் பட்டியல் நேற்று -13- வெளியிடப்பட்டது. அமெரிக்கா மேற்கொண்ட ஆய்விற்கமைய இந்த பட்டியல் வெளியாகியுள்ளது. அதில் இலங்கை அதிகமாக தேடப்பட்ட நாடாக மாறியுள்ளது.
அதற்கமைய கடந்த ஏப்ரல் மாதம் முதல் இலங்கை எங்கே என தீவிரமான தேடப்பட்டுள்ளதாக இந்த ஆய்வில் தெரியந்துள்ளது.
ஏப்ரல் மாதம் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலே இதற்கு முக்கியமான காரணமாகியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
கூகிள் தேடுதலில் இலங்கை குண்டு வெடிப்பு மற்றும் உலகில் இலங்கை எங்குள்ளது? போன்ற வார்த்தைகளே தொடர்ந்து தேடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
இதேவேளை, அமெரிக்கர்கள் இடையில் பிரபலமான சுப்பர் பந்து மைதானம் அல்லது வேற்று கிரகவாசிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் பகுதி ஆகிய முக்கிய இடங்களை பின்தள்ளி இலங்கை முன்னணி இடம் பிடித்துள்ளது.
அத்துடன் அமெரிக்கர்களில் நூற்றுக்கு 90 வீதமானோர் கூகுள் கணக்குகளை பயன்படுத்துகின்ற நிலையில் அவர்களில் 87 வீதமானோர் இணையம் பயன்படுத்துவதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதற்கமைய 2019ஆம் ஆண்டில் அமெரிக்காவிலும் அதிகமானோர் "Where is" என்ற வார்த்தையில் அதிகமாக இலங்கையையே தேடியுள்ளதாக கூகிள் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Post a Comment