இலங்கையில் மண்சரிவை, குறைக்கும் முயற்சியில் அமெரிக்கா
இலங்கையில் மண்சரிவுகளை குறைக்கும் முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இலங்கையிலுள்ள அமெரிக்க தூதரகம் இன்று -03- வௌியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
களுத்துறை – நிக்கஹ பகுதியில் மண்சரிவு முகாமைத்துவம் தொடர்பில் தேசிய கட்டட ஆய்வு நிறுவகத்தின் மண்சரிவு ஆய்வு பிரிவிற்கு கண்காணிப்பு உபகரணமொன்றை பரிசளித்துள்ளதாக ஐக்கிய அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.
இதற்கிணங்க, அமெரிக்க புவியியல் ஆராய்ச்சி நிறுவகத்தின் பொறியியலாளர் மற்றும் புவியியல் நிபுணர்கள் கடந்த நவம்பர் மாதம் 5 ஆம் திகதி முதல் 15 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் நாட்டிற்கு வருகை தந்து மண்சரிவு ஆராய்ச்சி உபகரணங்களை நாட்டில் நிறுவ நடவடிக்கை எடுத்ததாக தூதரகம் தெரிவித்துள்ளது.
அத்துடன், மண்சரிவு தொடர்பான வரைபடத்தின் தரத்தை மேம்படுத்தல் , அனர்த்தங்களுக்கு பதிலளிப்பதில் விஞ்ஞானிகளின் பங்களிப்பு ஆகியவை குறித்தும் அமெரிக்க புவிவியல் ஆராய்ச்சி நிறுவகத்தின் அதிகாரிகள் தேசிய கட்டட ஆய்வு நிறுவகத்தின் அதிகாரிகளை தௌிவூட்டியுள்ளனர்.
அமெரிக்காவின் வௌிநாட்டு இடர் முகாமைத்துவ அலுவலகமும் நாட்டில் மண்சரிவு அனர்த்தங்களைக் கட்டுப்படுத்த ஒத்துழைப்பு வழங்கியுள்ளதாக தூதரகத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Post a Comment